மருத்துவ சிகிச்சைக்காக கொல்கத்தா உட்லேண்ட்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கங்குலி இன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், இந்திய கிரிக்கெட் வாரியத்தின் தலைவருமான சவுரவ் கங்குலி (ஜனவரி 2) கடந்த சனிக்கிழமை அன்று நெஞ்சு வலி காரணமாக மருத்துவமனையில் அனுமத்திக்கப்பட்டார். மருத்துவர்கள் அவருக்கு ஆஞ்சியோ பிளாஸ்டி சிகிச்சையும் செய்தனர். அதன் பின்னரும் மருத்துவ சிகிச்சைக்காக கொல்கத்தாவில் உள்ள உட்லேண்ட்ஸ் மருத்துவமனையிலேயே கங்குலி தங்கி இருந்தார்.
இந்நிலையில் இன்று மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார் கங்குலி. விரைவில் உடல்நலம் தேறி வழக்கமான பணிகளை கங்குலி தொடர வேண்டுமென பலரும் அவருக்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
Loading More post
முகக்கவசம் அணியாத வாகன ஓட்டிகளை எச்சரித்து அனுப்பிய சென்னை போக்குவரத்து காவல்துறை
கொரோனா 4-ஆம் அலை மிக ஆபத்தானது; தனியார் மருத்துவமனையை நோக்கி ஓடாதீர்கள்: டெல்லி முதல்வர்
"வாக்குச்சாவடியில் சிஐஎஸ்எப் நடத்தியது இனப்படுகொலை!" - மேற்கு வங்க முதல்வர் மம்தா ஆவேசம்
”பொதுத்தேர்வுகளை ரத்து செய்ய வேண்டும்!” - மாணவர்களைப் பாதுகாக்க சோனு சூட் வேண்டுகோள்
தொடங்கியது தடுப்பூசி திருவிழா: கொரோனா பரவலைத் தடுக்க பிரதமர் மோடியின் 4 கோரிக்கைகள்!