கார்த்திக் நரேன் இயக்கும் ‘தனுஷ் 43’ படத்தில் இணைந்துள்ளார், தடம், மூக்குத்தி அம்மன் புகழ் ஸ்மிருதி வெங்கட்.
தனுஷ் நடிப்பில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் ‘கர்ணன்’, கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ’ஜகமே தந்திரம்’ விரைவில் வெளிவரவிருக்கின்றன. இதனைத்தொடர்ந்து, தனுஷின் 43 ஆவது படத்தை கார்த்திக் நரேன் இயக்க இருப்பதாக சமீபத்தில் அறிவிப்பு வெளியானது. ஜி.வி. பிரகாஷ் இசையமைக்க சத்ய ஜோதி ஃபிலிம்ஸ் தயாரிக்கிறது. மாளவிகா மோகனன் ஹீரோயினாக நடிக்கிறார்.
இந்நிலையில், மகிழ் திருமேனி இயக்கத்தில் சூப்பர் ஹிட் படமாக கொண்டாடப்பட்ட ’தடம்’ படத்தின் ஹீரோயின் ஸ்மிருதி வெங்கட் தனுஷ் படத்தில் இணைந்துள்ளார். இவர், சமீபத்தில் வெளியான ’மூக்குத்தி அம்மன்’ படத்தில் எப்போதும் சமையல் அறையில் சமைத்துக்கொண்டே இருக்கும் ஆர்.ஜே பலாஜியின் பரிதாப தங்கையாக நடித்து பாராட்டுக்களைக் குவித்தார். இவரது காட்சிகள் அனைவரையும் கவனம் ஈர்த்தது.
இந்நிலையில், இவர் ‘தனுஷ் 43’ படத்தில் இணைந்திருப்பதை படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. ஸ்மிருதி வெங்கட் தனுஷுக்கு தங்கையாக நடிக்கிறார் என்று சொல்லப்படுகிறது.
Loading More post
ம.நீ.ம, சமக, ஐ.ஜே.கே கூட்டணி உறுதி - சரத்குமார் அறிவிப்பு
சைக்கிள் சின்னத்தில் போட்டியிட அதிமுகவிடம் 12 தொகுதிகள் கேட்கும் தமாகா
வேளச்சேரி தொகுதியில் ராதிகா சரத்குமார் போட்டி
சாம்சங் கேலக்ஸி A32 விலை மற்றும் சிறப்பம்சங்கள்!
மாற்றுத்திறனாளி இளைஞருக்கு சொந்த செலவில் பைக் வாங்கிக் கொடுத்த மதுரை ஆட்சியர்!
அதிமுகவுடன் அதிருப்தி... தேமுதிகவிடம் எஞ்சியிருக்கும் 'வாய்ப்புகள்' என்னென்ன? - ஒரு பார்வை
அதிகரிக்கும் சிலிண்டர் விலை.. சின்ன சின்ன கவனம் போதும்.. கேஸ் மிச்சப்படுத்தும் 11 வழிகள்!
வன்னியர்களுக்கு 10.5% சதவீத இடஒதுக்கீடு : சாத்தியமா, சட்டச்சிக்கல் உள்ளதா? - விரிவான அலசல்
வாழ்வா, சாவா போராட்டத்தில் கம்யூனிஸ்ட், காங்கிரஸ்... எப்படி இருக்கிறது கேரள தேர்தல் களம்?