எதிர்வரும் ஜனவரி 15 அன்று VAIO லேப்டாப் இந்தியாவில் மீண்டும் கம்பேக் கொடுக்க உள்ளது. இப்போதைக்கு இதன் விற்பனை பிளிப்கார்ட் நிறுவனத்தின் மூலமாக ஆன்லைனில் மட்டுமே ஆர்டர் செய்தால் தான் பெற முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கலர் கலரான வண்ணங்களில், மெல்லிய வடிவமைப்பில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் இந்திய லேப்டாப் சந்தையில் ஹாட் சேலாகி வந்தது VAIO. திடீரென எந்தவித தகவலும் இல்லாமல் சந்தையில் இருந்து மறைந்துவிட்டது.
ஹாங்காங்கை தலைமையிடமாக கொண்டு இயங்கும் NEXSTO கம்பெனி இந்தியாவில் வயோ லேப்டாப்பை கொண்டுவர ஜப்பானின் வயோ கார்பரேஷனுடன் ஒப்பந்தம் இட்டுள்ளது. NEXSTO மலேஷியா, சிங்கப்பூர், தைவான் மாதிரியான நாடுகளில் வயோ லேப்டாப்பை விற்பனை செய்து வருவதும் குறிப்பிடத்தக்கது.
லேப்டாப் வாங்குபவர்களின் டாப் சாய்ஸாக வயோ இருக்க வேண்டுமென்ற விருப்பத்துடன் இதை இந்தியாவில் லான்ச் செய்ய உள்ளதாக, தெற்காசிய பிராந்திய வணிக இயக்குனர் சீமா தெரிவித்துள்ளார். இதுவரை இந்த வயோ லேப்டாப்பின் ஸ்பெசிபிகேஷன் மாதிரியான விவரங்கள் வெளியாகவில்லை.
Loading More post
தமிழகத்தில் இன்று 160 இடங்களில் கோவிஷீல்டு, 6 பகுதிகளில் கோவாக்சின் செலுத்த ஏற்பாடு!
காணும் பொங்கல் கொண்டாட கட்டுப்பாடுகள்: கடற்கரைகளில் காவல் துறை கண்காணிப்பு தீவிரம்!
நாடு முழுவதும் இன்று முதல் கொரோனா தடுப்பூசி: மக்கள் விவரமறிய 'டோல் ஃப்ரீ' எண் வெளியீடு
டாப் செய்திகள்: கொரோனா தடுப்பூசி முதல் ஆஸ்திரேலிய டெஸ்ட் போட்டி வரை!
தோல்வியில் முடிந்த விவசாயிகளுடனான மத்திய அரசின் 9ஆம் கட்ட பேச்சுவார்த்தை
ஈஸ்வரன்... போதுமான பொழுதுபோக்கு அனுபவம் தந்ததா? - திரைப்பார்வை
திமிறும் காளைகளை திமில் தழுவி அடக்கும் காளையர் - அவனியாபுரம் ஜல்லிக்கட்டு வீடியோ தொகுப்பு
'ஜல்லிக்கட்டு' ஆன 'சல்லிக்கட்டு'... தொன்மையும் வரலாறும் - ஒரு பார்வை
அனல் பறக்கும் அவனியாபுரம் ஜல்லிக்கட்டு... சீறும் காளைகள், அடக்க பாயும் வீரர்கள்! - ஆல்பம்