தெலங்கானா மாநில முதல்வர் சந்திரசேகர் ராவின் உறவினரும், முன்னாள் ஹாக்கி வீரருமான பிரவீன் ராவ் மற்றும் அவரது உறவினர் இருவரை கடத்திக் கொண்டு சென்ற வழக்கில் ஆந்திர மாநில முன்னாள் அமைச்சரும், அல்லகடா தொகுதியின் முன்னாள் எம்.எல்.ஏவுமான பூமா அகிலா பிரியா மற்றும் அவரது கணவர் பார்கவும் ஹைதராபாத் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஹாக்கி வீரர் பிரவீன் ராவ் மற்றும் இரு உறவினர்கள் அவர்களது வீட்டில் இருந்தபோது வருமான வரித்துறை அதிகாரியைபோல வேடமிட்டு வந்த கடத்தல் கும்பல் அவர்களை கடத்தி சென்றுள்ளனர். தொடர்ந்து அவர்களை மறுநாள் காலை 3 மணி அளவில் சாலையோரம் விட்டு சென்றுள்ளனர். தொடர்ந்து பாதிக்கப்பட்டவர்களின் சார்பில் அவரது சகோதரரும், வழக்கறிஞருமான பிரதாப் குமார் போலீசில் புகார் கொடுத்துள்ளார்.
இந்த கடத்தலுக்கு மூளையாக இருந்தது முன்னாள் அமைச்சர் பூமா அகிலா பிரியா என தெரியவந்துள்ளது. இதையடுத்து போலீசார் அவரையும், அவரது கணவரையும் கஸ்டடியில் எடுத்து, விசாரித்து வருகின்றனர். அவர்கள் மீது இந்திய தண்டனைச் சட்டத்தின் கீழ் வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது.
Loading More post
திண்டுக்கல்: ஆசிரியைக்கு கொரோனா தொற்று உறுதியானதால் மூடப்பட்ட அரசுப் பள்ளி
கிரிக்கெட் வீரர் நடராஜனுக்கு கொரோனா இல்லை
மு.க.ஸ்டாலினுக்கு திருத்தணி முருகன் கோயிலில் பூஜை செய்த வெள்ளி வேல் பரிசு
சசிகலாவை தொடர்ந்து இளவரசிக்கும் கொரோனா தொற்று உறுதி
நடராஜன் உள்ளிட்ட 6 இளம் வீரர்களுக்கு 'தார்' கார் பரிசு - ஆனந்த் மஹிந்திரா
மசினக்குடியும்... ரிசார்ட்டுகளும்! அங்கு நடப்பது என்ன? ஆபத்து யாருக்கு?
அமெரிக்க அதிபர் பைடனின் தொடக்க உரையை செதுக்கிய இந்தியர்... யார் இந்த வினய் ரெட்டி?!
'Is Love Enough? Sir' - காதலில் காசு ஒரு பொருட்டே இல்லைன்னு யார் சார் சொன்னது?!
இந்தியக் குடும்பங்களில் சுரண்டப்படும் பெண்களின் உழைப்பு - ‘தி கிரேட் இண்டியன் கிச்சன்’