இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் நாளை விளையாட உள்ளது. நான்கு போட்டிகள் கொண்ட இந்தத் தொடர் 1-1 என்ற சமநிலையில் உள்ளது. இந்திய அணிக்கு ரஹானே, ஜடேஜா, கில் மாதிரியான பேட்ஸ்மேன்கள் வலு சேர்க்கிறார்கள்.
அதே நேரத்தில் ஆஸ்திரேலிய அணி பேட்ஸ்மேன்கள் முதல் இரண்டு போட்டிகளில் பெரிதும் ரன் சேர்க்க தவறி இருந்தனர். அதுதான் இரண்டாவது போட்டியில் அந்த அணி வீழ்ச்சியடையவும் காரணம். இதை ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் பாண்டிங்கும் குறிப்பிட்டிருந்தார். ஸ்மித், லபுஷேன் மாதிரியான பேட்ஸ்மேன்கள் ரன் சேர்க்க தடுமாறுவதே இதற்கு முக்கிய காரணம்.
இந்நிலையில் வார்னர் மூன்றாவது போட்டியில் விளையாட அணிக்குள் வந்திருப்பது ஆஸ்திரேலியாவுக்கு வலு சேர்க்கலாம். தொடக்க ஆட்டக்காரராக வார்னர் சிறப்பான தொடக்கத்தை கொடுத்தால் அவர் போட்டு வைத்த கோட்டில் ரோடே போட்டுவிடுவார்கள் ஸ்மித்தும், லபுஷேனும். முதல் இரண்டு போட்டியில் ஓப்பனிங்கில் சொதப்பியதே அந்த அணி பேட்டிங் வரிசையில் தடுமாற காரணம். இதை இந்த போட்டியில் ஆஸ்திரேலியா சரி செய்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
Loading More post
அன்றே கணித்த சுனில் கவாஸ்கர்: 32 ஆண்டுகால ஆஸி.,யின் சரித்திரத்தை தகர்த்த இந்தியா
வாஷிங்டன் சுந்தர், பன்ட் விளாசல்! - டெஸ்ட் தொடரை வென்றது இந்தியா
"டாக்டர் சாந்தா... அடையாறின் மற்றோர் ஆலமரம்!" - நெட்டிசன்களின் ட்வீட்டாஞ்சலி
அமெரிக்க அதிபர் பதவியேற்பு விழா: பொறுப்பேற்கும் முன்பே பைடன் சந்திக்கும் முதல் சவால்!
“சசிகலாவை சேர்க்க முடியாது” -பிரதமரை சந்தித்தபின் முதல்வர் பழனிசாமி பேட்டி
"டாக்டர் சாந்தா... அடையாறின் மற்றோர் ஆலமரம்!" - நெட்டிசன்களின் ட்வீட்டாஞ்சலி
மருத்துவத் துறைக்கு தன்னலமற்ற சேவை வழங்கிய மருத்துவர் சாந்தா கடந்துவந்த பாதை
"யாருக்கும் விற்க எங்களிடம் எந்த தரவும் இல்லை!" - சிக்னல் சி.இ.ஓ அருணா சிறப்புப் பேட்டி
பைடன், கமலா பதவியேற்புக்காக 'காரிஸன்' நகரமாகும் வாஷிங்டன் டி.சி... அதென்ன 'காரிஸன்'?