ஆவடி அருகே நகை வாங்குவதுபோல் நடித்து நகையை திருடிச் சென்ற இரண்டு பெண்களால் பரபரப்பு ஏற்பட்டது. கடை உரிமையாளர் அளித்த புகாரின் பெயரில் சிசிடிவி காட்சிகளை கொண்டு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ஆவடி அருகே உள்ள திருமுல்லைவாயில் சரஸ்வதி நகர் பகுதியில் சுனில் என்பவர் நகை வியாபாரம் செய்து வருகிறார். இந்நிலையில் இவரது கடைக்கு வந்த இரண்டு பெண்கள் அவரிடம் கம்மல் வாங்க வந்ததாகவும் அதற்கான டிசைன்களை காண்பிக்குமாறும் கூறியுள்ளனர்.
இதனையடுத்து பல்வேறு டிசைன்களை பார்த்த இரு பெண்களும் கடைக்காரர் அசந்த நேரம் பார்த்து நகையை எடுத்து மறைத்து வைக்கும் காட்சிகள் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. மேலும் பல்வேறு டிசைன்களை பார்த்த இரு பெண்களும் தங்களுக்கு பிடிக்கவில்லை என சென்றவுடன் இறுதியாக நகைகளை கணக்கு பார்த்தபோது 6 கிராம் தங்க நகை மாயமானது தெரியவந்தது.
இதைத்தொடர்ந்து கடையில் இருந்த சிசிடிவி கேமரா காட்சிகளை பார்த்தபோது அந்த இரண்டு பெண்கள் நகையை திருடும் காட்சிகள் அதில் பதிவாகியிருந்தன. இதனைக் கொண்டு கடைக்காரர் திருமுல்லைவாயல் காவல் நிலையத்தில் அளித்தார்.
அவரது புகாரின் பேரில் சிசிடிவி காட்சிகளை கொண்டு திருமுல்லைவாயில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். நகை வாங்குவத போல் நடித்து நகைகளைத் திருடி சென்ற இரண்டு பெண்களால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
Loading More post
திண்டுக்கல்: ஆசிரியைக்கு கொரோனா தொற்று உறுதியானதால் மூடப்பட்ட அரசுப் பள்ளி
கிரிக்கெட் வீரர் நடராஜனுக்கு கொரோனா இல்லை
மு.க.ஸ்டாலினுக்கு திருத்தணி முருகன் கோயிலில் பூஜை செய்த வெள்ளி வேல் பரிசு
சசிகலாவை தொடர்ந்து இளவரசிக்கும் கொரோனா தொற்று உறுதி
நடராஜன் உள்ளிட்ட 6 இளம் வீரர்களுக்கு 'தார்' கார் பரிசு - ஆனந்த் மஹிந்திரா
மசினக்குடியும்... ரிசார்ட்டுகளும்! அங்கு நடப்பது என்ன? ஆபத்து யாருக்கு?
அமெரிக்க அதிபர் பைடனின் தொடக்க உரையை செதுக்கிய இந்தியர்... யார் இந்த வினய் ரெட்டி?!
'Is Love Enough? Sir' - காதலில் காசு ஒரு பொருட்டே இல்லைன்னு யார் சார் சொன்னது?!
இந்தியக் குடும்பங்களில் சுரண்டப்படும் பெண்களின் உழைப்பு - ‘தி கிரேட் இண்டியன் கிச்சன்’