பிரபு சாலமனின் ‘காடன்’ திரைப்படம் வரும் மார்ச் 26 ஆம் தேதி தியேட்டர்களில் வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது.
தனுஷ், கீர்த்தி சுரேஷ் நடித்த ’தொடரி’ படத்துக்குப் பிறகு இயக்குனர் பிரபு சாலமன் இயக்கி வரும் படம், ’ஹாத்தி மேரே சாத்தி’. இந்தி, தமிழ், தெலுங்கில் உருவாகும் இந்தப் படத்தில் ராணா ஹீரோவாக நடிக்கிறார். மேலும், விஷ்ணு விஷால், ஸோயா ஹூசைன், ஸ்ரேயா பில்கோன்கர், அஸ்வின் ராஜா, ரோபோ சங்கர், ஜெகபதி பாபு உட்பட பலர் நடிக்கின்றனர்.
இந்தப் படத்தின் தமிழ்ப் பதிப்புக்கு ‘காடன்’ என்றும் தெலுங்குக்கு ’ஆரண்யா’ என்றும் டைட்டில் வைத்துள்ளனர்.
ராஜேஷ் கண்ணா, தனுஷா நடிப்பில், சாண்டோ சின்னப்பா தேவர், 1971 ஆம் ஆண்டு இந்தியில் தயாரித்த படம், ’ஹாத்தி மேரே சாத்தி’. அவர் சகோதரர் எம்.ஏ.திருமுகம் இயக்கி இருந்தார். இந்தப் படம் பின்னர் எம்.ஜி.ஆர், கே.ஆர்.விஜயா நடிப்பில் ’நல்ல நேரம்’ என்ற பெயரில் தமிழில் ரீமேக் செய்யப்பட்டது.
இந்தக் கதையை மட்டும் எடுத்துக்கொண்டு இப்போதைய டிரெண்டுக்கு ஏற்ப பிரபு சாலமன் ரீமேக் செய்யப்படுவதாகக் கூறப்படுகிறது. இதன் ஷூட்டிங் இந்தியாவில் பல மாநிலக் காடுகளில் படமாக்கப்பட்டு வந்தது. இதற்காக, ராணா சிறப்பு பயிற்சி எல்லாம் எடுத்திருந்தார். இந்நிலையில், ‘காடன்’ படம் வரும் பிப்ரவரி 26 ஆம் தேதி தியேட்டர்களில் வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது.
Loading More post
நீதிபதிகள் நியமனம் குறித்த பேச்சு: ஆர்.எஸ்.பாரதிக்கு எதிராக வழக்குத் தொடர அனுமதி
அதானி துறைமுக விரிவாக்கத்தை எதிர்த்து மாபெரும் இணையவழி பதாகைப் போராட்டம்: சீமான் அழைப்பு
"பத்ம விருதுகளை திருப்பியளிக்கவில்லை!" - இளையராஜா விளக்கம்
வசூல் வேட்டை நடத்தும் ‘மாஸ்டர்’ ; 5 நாளில் இத்தனை கோடிகளா!
'சென்னைக்கு வெள்ள அபாயம்!' - காட்டுப்பள்ளி அதானி துறைமுக விரிவாக்கத்திற்கு எதிர்ப்பு ஏன்?
"யாருக்கும் விற்க எங்களிடம் எந்த தரவும் இல்லை!" - சிக்னல் சி.இ.ஓ அருணா சிறப்புப் பேட்டி
பைடன், கமலா பதவியேற்புக்காக 'காரிஸன்' நகரமாகும் வாஷிங்டன் டி.சி... அதென்ன 'காரிஸன்'?
'மீன் வகைகளில் கவனம் முக்கியம்!' - கர்ப்பிணிகளின் தினசரி டயட்டில் இருக்கவேண்டிய உணவுகள்
'சென்னைக்கு வெள்ள அபாயம்!' - காட்டுப்பள்ளி அதானி துறைமுக விரிவாக்கத்திற்கு எதிர்ப்பு ஏன்?