திண்டிவனம் அருகே தாய் தமிழ் பள்ளியில் ஆன்லைன் கல்விக்கு மாற்றாக நுண் வகுப்பறைகள் நடத்தப்படுகின்றன.
தமிழகத்தில் கொரோனா தொற்றுப் பரவலால் பள்ளிகளை திறக்க முடியாத நிலை உருவாகியுள்ளது. ஆனால், தனியார் பள்ளிகள் ஆன்லைன் வகுப்புகளைத் தொடங்கி மாதத் தேர்வுகள் வரை நடத்தி முடித்து விட்டன. இதுபோன்ற வகுப்புகளால் பாகுபாடுகள் உருவாகும் என்ற எதிர்ப்புகளும் உண்டு. ஆன்லைன் வழிக் கல்வியை முழுமையாக செயல்படுத்த முடியாத கிராமப்புற அரசுப்பள்ளி மாணவர்களுக்கு என்ன செய்யமுடியும் என்ற கேள்வி எழுந்துள்ளது. அதற்கான ஒரு மாற்றுவழிதான் நுண் வகுப்பறைகள். ஏற்கெனவே ஆறு மாதங்களுக்கும் மேலாக தொடர்ச்சியாக கல்வியோடு தொடர்பு இல்லாமல் பள்ளி மாணவர்கள் வீடுகளில் இருந்து வருகிறார்கள்.
அவர்களுக்கு பள்ளியுடனும் பாடங்களுடனும் மீண்டும் தொடர்பை ஏற்படுத்தும் நோக்கத்தில் உருவாக்கப்பட்டவையே நுண் வகுப்பறைகள். பள்ளிகளைத் திறக்க முடியாது. கிராமங்களில் ஆன்லைன் வகுப்பறைகளுக்கு சாத்தியமில்லை என்பதால் குழந்தைகள் ஓர் இடத்தில் கூடுவதில் சிரமம் உள்ளது. எனவே புதிய கல்விச்சூழலை கிராமப்புற மாணவர்களுக்கு உருவாக்க வேண்டிய கட்டாயம் நேர்ந்துள்ளது.
கிராமப்புறங்களில் தொடர்ந்து பள்ளிகள் நடத்தப்படாமல் இருந்தால் கல்வியின் தொடர்பு மறந்து விடும். எனவே மைக்ரோ கிளாசஸ் எனப்படும் நுண் வகுப்பறைகளை பள்ளி நிர்வாகம் தொடங்கியது. இந்த நுண் வகுப்பறையில் ஒரு பொறுப்பு ஆசிரியர் மற்றும் இரண்டு பொறுப்பு பெற்றோர்கள் மற்றும் பத்திற்கும் குறைவான மாணவர்கள் இவ்வாறு மொத்தம் பத்து மையங்களை கொண்டுள்ளது, இந்த தாய் தமிழ் பள்ளியின் நுண் வகுப்பறை கட்டமைப்பு.
காலையும் மதியமும் வகுப்புகள் நடைபெறுகின்றன. மதிய உணவு, பள்ளியில் சமைக்கப்பட்டு அந்தந்த மையங்களுக்கு ஆட்டோக்களில் எடுத்துச் செல்லப்படுகின்றன. காலையில் வருவோர் சாப்பிட்டுவிட்டு வீட்டுக்குச் செல்லலாம். மதியம் வருவோர் சாப்பிட்ட பின்னர் வகுப்புகளில் பங்கேற்கலாம் என ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
காலையில் எட்டு பிள்ளைகள், மாலையில் எட்டு பிள்ளைகள் என ஒரு நுண் வகுப்பறையில் 16 பிள்ளைகள் படித்து வருகிறார்கள். முதல் வாரத்தில் 130 மாணவர்கள் வந்த நிலையில், தற்போது அந்த எண்ணிக்கை 153 ஆக உயர்ந்திருக்கிறது. ஆர்வத்துடன் குழந்தைகள் நுண் வகுப்புகளில் பங்கேற்கிறார்கள். ஒரு மையத்தில் ஒரு பெற்றோர் தன்னார்வலராக செயல்படுகிறார். ஒரு நுண் வகுப்பறைக்கு ஐந்து பிள்ளைகள் என்ற அளவீட்டை மாணவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு காரணமாக எட்டாக மாற்றிக்கொண்டார்
Loading More post
அறுவைசிகிச்சைக்காக சில நாட்கள் ஓய்வு: கமல் அறிவிப்பு
"தென்மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழைக்கு வாய்ப்பு” -சென்னை வானிலை ஆய்வு மையம்
செங்கல்பட்டு டோல்கேட்: கூட்ட நெரிசலால் வாகன ஓட்டிகள் அவதி
திமுகவில் இணைந்த ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள்
பாலக்கோட் தாக்குதல் பற்றி முன்பே அறிந்திருந்த அர்னாப்? கசிந்த வாட்ஸ்அப் உரையாடல்
கொரோனா தடுப்பூசியை யார் போடலாம்; யார் போடக்கூடாது? கோவாக்சின் பற்றிய முழுத் தகவல்
திடீர் மழையால் 'கருப்பான' பொங்கல்: நீரில் மூழ்கிய பயிர்கள்... வேதனையில் விவசாயிகள்!
பரிசோதனை முழுமைபெறாத கோவாக்சின் தடுப்பூசியை இந்திய அரசு வாங்குவது ஏன்? எழும்பும் கேள்விகள்
ஈஸ்வரன்... போதுமான பொழுதுபோக்கு அனுபவம் தந்ததா? - திரைப்பார்வை
சப்ஜெக்டில் மட்டும் சமூக அக்கறை போதுமா? - 'பூமி' என்னும் சினிமா எழுப்பும் கேள்விகள்!