வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி ஹீரோவாக அறிமுகமாகும் படத்தில் பாரதிராஜாவுக்கு பதில் நடிகர் விஜய் சேதுபதி நடிக்கவிருக்கிறார்.
கடந்த ஆண்டு வெளியான ’அசுரன்’ பட வெற்றிக்குப் பிறகு வெற்றிமாறன் பாவக்கதைகளில் இடம்பெற்ற நான்கில் ஓர் இரவு என்ற கதையை இயக்கி இருந்தார். அதன்பிறகு, தற்போது ஜெயமோகனின் சிறுகதையை எடுத்து சூரியை வைத்து பெயரிடப்படாத புதியப் படத்தினை இயக்கி வருகிறார். இப்படத்திற்கு இளையராஜா இசையமைக்க எல்ரெட் குமார் தயாரிக்கிறார். கடந்த மாதம் முதல் இப்படத்தின் ஷூட்டிங் சத்தியமங்கலம் காட்டுப் பகுதியில் நடைபெற்று வருகின்றது.
ஏற்கெனவே, இப்படத்தில் நடிக்க பாரதிராஜா ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தார். சத்தியமங்கலம் பகுதியில் கடும் குளிர் என்பதால் பாரதிராஜா விலகவே வெற்றிமாறன் கூட்டணியின் முக்கிய நடிகரான கிஷோர் நடிக்கிறார் என்று தகவல்கள் வெளியானது. பொல்லாதவன், ஆடுகளம், விசாரணை, வடசென்னையில் தொடர்ந்து கிஷோருக்கு வாய்ப்பு கொடுக்கவே, இப்படத்திலும் பாரதிராஜாவுக்கு பதில் கிஷோர் நடிக்கிறார் என்று சொல்லப்பட்டது.
ஆனால், தற்போது அவரும் விலகவே, விஜய் சேதுபதி ஒப்பந்தம் ஆகியிருப்பதாகவும், கடந்த 4 ஆம் தேதி போட்டோ ஷூட் நடத்தியதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதில், விஜய் சேதுபதி வயதான தோற்றத்தில் போராளியாக நடிக்கிறார்.
Loading More post
டிக்டாக் பிரபலம் உயிரிழப்பு விவகாரம்: பதவியை ராஜினாமா செய்தார் சிவசேனா அமைச்சர்
"தமிழ்நாட்டிலேயே ரொம்ப நல்ல டீ இது"-ருசித்து பாராட்டிய ராகுல்காந்தி
அசாம்: கோயில் வழிபாட்டுடன் நாளை பரப்புரையை தொடங்குகிறார் பிரியங்கா காந்தி
9 சீரிஸ் மாடல் ஸ்மார்ட்போன்கள் மற்றும் ஸ்மார்ட்வாட்சை அறிமுகம் செய்யும் ஒன்பிளஸ்
இனப்படுகொலை குற்றத்திலிருந்து இலங்கையை காப்பாற்றும் வகையில் தீர்மானம்: சீமான் கண்டனம்
வன்னியர்களுக்கு 10.5% சதவீத இடஒதுக்கீடு : சாத்தியமா, சட்டச்சிக்கல் உள்ளதா? - விரிவான அலசல்
வாழ்வா, சாவா போராட்டத்தில் கம்யூனிஸ்ட், காங்கிரஸ்... எப்படி இருக்கிறது கேரள தேர்தல் களம்?
கவுன்டவுனை தொடங்கிய கமல்: மூன்றாம் அணி இலக்கை நெருங்குகிறதா மக்கள் நீதி மய்யம்?
குழந்தைகளுக்கு தேவையான 'வைட்டமின் டி' உடலில் சேருவதை உறுதிசெய்வது எப்படி? - ஒரு வழிகாட்டி