கெளதம் மேனன் இயக்கத்தில் அஜித் நடித்த ‘என்னை அறிந்தால்’ திரைப்படம் வரும் வெள்ளிக்கிழமை முதல் தியேட்டர்களில் மீண்டும் வெளியாவதால் அஜித் ரசிகர்கள் உற்சாகத்தில் இருக்கிறார்கள்.
கடந்த 2015 ஆம் ஆண்டு அஜித் காவல்துறை அதிகாரியாக நடித்த ‘என்னை அறிந்தால்’ திரைப்படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் பாராட்டுக்களை குவித்தது. சிங்கிள் மதராக இருக்கும் த்ரிஷாவை அஜித் அதே அன்போடு ஏற்றுக்கொள்வதும், அவர் இறந்த பின்பு அவரது மகளை தனது மகளாக வளர்ப்பதும் சினிமா விமர்சகர்களால் கொண்டாடப்பட்டது. சத்யதேவ் என்ற கேரக்டரில் காவல்துறை அதிகாரியாக அஜித் நடிப்பில் மிரட்டியிருப்பார். இப்போதும், ‘மழை வரப்போகுதே’, ‘ அதாரு அதாரு’ பாடல்கள் பலரின் காலர் டியூன்களாக ஒலித்துகொண்டிருக்கின்றன.
கொரோனாவால் தியேட்டர்கள் மூடப்பட்டிருந்த நிலையில் கடந்த நவம்பர் 10 ஆம் தேதி முதல் தியேட்டர்கள் திறக்கப்பட்டன. கொரோனா அச்சத்தால் மக்களின் வருகை குறைந்துள்ளதால், பழைய படங்களை மீண்டும் வெளியிட்டு வருகிறார்கள் தியேட்டர் உரிமையாளர்கள்.
சமீபத்தில்தான், ’புதுப்பேட்டை’, ’ஆயிரத்தில் ஒருவன்’ மீண்டும் வெளியிடப்பட்டன. இந்நிலையில், என்னை அறிந்தால் படம் மீண்டும் வரும் ஜனவரி 8 ஆம் தேதிமுதல் தமிழகத்தில் குறிப்பிட்ட தியேட்டர்களில் மட்டும் வெளியாகவிருக்கிறது.
Loading More post
தருமபுரி: மர்மமான முறையில் உயிரிழந்த மக்னா யானை... வனத்துறையினர் விசாரணை!
கேரள ஆளுநர் ஆரிப்முகமது கான் தனது மகனுடன் சபரிமலையில் தரிசனம்
தடுப்பூசி திருவிழா: இந்தியாவில் ஒரேநாளில் 27 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி
தமிழகத்தில் அதிகரிக்கும் கொரோனா: முதல்வர் பழனிசாமி தலைமையில் இன்று ஆலோசனை
கோயம்பேட்டில் சிறு குறு வியாபாரம் அனுமதிக்கப்படுமா? இன்று பேச்சுவார்த்தை