மத்திய பிரதேசத்தில் ஒரு பெண் ரூ.1.5 கோடிக்கு ஈடாக தனது கணவரை, அவரின் காதலியை திருமணம் செய்து கொள்ள அனுமதித்தார்.
மத்திய பிரதேசத்தின் போபாலில் நடந்த ஒரு வினோதமான சம்பவத்தில், ஒரு பெண் தனது மோசடி கணவரை ரூ .1.5 கோடிக்கு விவாகரத்து செய்ய ஒப்புக் கொண்டார். போபாலில் உள்ள குடும்ப நீதிமன்றத்தில் ஒரு சிறுமி தனது தந்தை, அவரின் சக ஊழியருடன் திருமணத்திற்குப் புறம்பான உறவு வைத்திருப்பதாகக் கூறி வழக்குத் தாக்கல் செய்தார். இந்த விவகாரத்தால் அவரது பெற்றோர்களிடையே வீட்டில் அடிக்கடி சண்டை சச்சரவுகள் ஏற்படுவதாகவும், இதனால் தனக்கும் தன் சகோதரியின் கல்விக்கும் இடையூறு விளைவிப்பதாகவும் அச்சிறுமி குற்றம் சாட்டினார்.
இதன்பின்னர் நீதிமன்றத்திற்கு தம்பதியினர் கவுன்சிலிங்கிற்கு வரவழைக்கப்பட்டனர். இதில் கணவர் தன்னை விட வயதான ஒரு சக ஊழியருடன் உறவு வைத்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அவர் தனது மனைவியை விட்டுவிட்டு தனது சக ஊழியருடன் ஒரு புதிய வாழ்க்கையைத் தொடங்க விரும்பினார். இருப்பினும், விவாகரத்துக்கு மனைவி உடன்படவில்லை. பல ஆலோசனை அமர்வுகளுக்குப் பிறகு, இந்த ஜோடி ஒரு உடன்பாட்டை எட்டியது. 1.5 கோடி ரூபாய் சொத்து மற்றும் ரொக்கம் கொடுத்தால் விவாகரத்திற்கு ஒப்புக்கொள்வதாக அவர் தெரிவித்தார்.
Loading More post
அதிமுகவுடன் அதிருப்தி... தேமுதிகவிடம் எஞ்சியிருக்கும் 'வாய்ப்புகள்' என்னென்ன? - ஒரு பார்வை
தொகுதி பங்கீடு: அதிமுக மீது தேமுதிக அதிருப்தி?
பிரதமர் மோடிக்கு கொரோனா தடுப்பூசி செலுத்திய அனுபவத்தை பகிர்ந்த புதுச்சேரி செவிலியர்!
தலைவாசல் சுங்கச்சாவடி மீது தாக்குதல் : தமிழக வாழ்வுரிமை கட்சி மீது புகார்... நடந்தது என்ன?
காவல்துறை பெண் அதிகாரிக்கே இந்த நிலைமையா?- ராஜேஸ் தாஸ் விவகாரத்தை விசாரிக்கும் நீதிமன்றம்
வன்னியர்களுக்கு 10.5% சதவீத இடஒதுக்கீடு : சாத்தியமா, சட்டச்சிக்கல் உள்ளதா? - விரிவான அலசல்
வாழ்வா, சாவா போராட்டத்தில் கம்யூனிஸ்ட், காங்கிரஸ்... எப்படி இருக்கிறது கேரள தேர்தல் களம்?
கவுன்டவுனை தொடங்கிய கமல்: மூன்றாம் அணி இலக்கை நெருங்குகிறதா மக்கள் நீதி மய்யம்?
குழந்தைகளுக்கு தேவையான 'வைட்டமின் டி' உடலில் சேருவதை உறுதிசெய்வது எப்படி? - ஒரு வழிகாட்டி