மதுரை அருகே பட்டப்பகலில் வீட்டில் தனியாக இருந்த மூதாட்டி ஓட ஓட வெட்டிப் படுகொலை. தடுக்க சென்ற மற்றொரு பெண்ணுக்கு அரிவாள் வெட்டு விழுந்தது.
மதுரை அருகே உள்ள உமச்சிகுளத்தைச் சேர்ந்தவர் பொன்னுத்தாய் (60). இவர் வீட்டில் தனியாக வசித்து வருகிறார். இந்நிலையில் வீட்டின் அருகில் வசிக்கும் முத்துச்செல்வம் என்பவருக்கும் மூதாட்டி பொன்னுத்தாய்க்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில், இன்று இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் திடீரென முத்துச்செல்வம் மூதாட்டி பொன்னுத்தாயை அரிவாளால் சரமாரியாக வெட்டி படுகொலை செய்துள்ளார். ரத்த வெள்ளத்தில் மூதாட்டி சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில் கொலையை தடுக்கச் சென்ற அருகில் வசிக்கும் பஞ்சு என்ற பெண்ணிற்கும் அரிவாள் வெட்டு ஏற்பட்டதில் கழுத்து மற்றும் கை பகுதிகளில் காயமடைந்து மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சம்பவம் அறிந்து வந்த காவல்துறையினர் மோப்ப நாய் மற்றும் கைரேகை நிபுணர்களின் உதவியோடு கொலை செய்து விட்டு தப்பி ஓடிய முத்துச்செல்வனை தேடி வருகின்றனர். மேலும் சம்பவம் குறித்து மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுஜித்குமார் நேரில் விசாரணை நடத்தினார். பட்டப் பகலில் வீட்டில் தனிமையாக இருந்த மூதாட்டியை ஓட ஓட விரட்டி படுகொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Loading More post
நீதிபதிகள் நியமனம் குறித்த பேச்சு: ஆர்.எஸ்.பாரதிக்கு எதிராக வழக்குத் தொடர அனுமதி
அதானி துறைமுக விரிவாக்கத்தை எதிர்த்து மாபெரும் இணையவழி பதாகைப் போராட்டம்: சீமான் அழைப்பு
"பத்ம விருதுகளை திருப்பியளிக்கவில்லை!" - இளையராஜா விளக்கம்
வசூல் வேட்டை நடத்தும் ‘மாஸ்டர்’ ; 5 நாளில் இத்தனை கோடிகளா!
'சென்னைக்கு வெள்ள அபாயம்!' - காட்டுப்பள்ளி அதானி துறைமுக விரிவாக்கத்திற்கு எதிர்ப்பு ஏன்?
"யாருக்கும் விற்க எங்களிடம் எந்த தரவும் இல்லை!" - சிக்னல் சி.இ.ஓ அருணா சிறப்புப் பேட்டி
பைடன், கமலா பதவியேற்புக்காக 'காரிஸன்' நகரமாகும் வாஷிங்டன் டி.சி... அதென்ன 'காரிஸன்'?
'மீன் வகைகளில் கவனம் முக்கியம்!' - கர்ப்பிணிகளின் தினசரி டயட்டில் இருக்கவேண்டிய உணவுகள்
'சென்னைக்கு வெள்ள அபாயம்!' - காட்டுப்பள்ளி அதானி துறைமுக விரிவாக்கத்திற்கு எதிர்ப்பு ஏன்?