2021 புத்தாண்டு தினத்தன்று இந்தியாவில் 60000 குழந்தைகள் பிறந்துள்ளதாக ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியம் (யுனிசெஃப்) தெரிவித்துள்ளது. உலகிலேயே இது தான் அதிகம் எனவும் சொல்லப்பட்டுள்ளது. உலக மக்கள் தொகையில் சீனா முதலிடத்திலும், இந்தியா இரண்டாவது இடத்திலும் உள்ளது குறிப்பிடத்தக்கது.
புத்தாண்டு தினத்தன்று 371504 குழந்தைகள் உலகம் முழுவதும் பிறந்துள்ளதாகவும் மதிப்பிட்டுள்ளது யுனிசெஃப். அதில் 52 சதவிகித குழந்தைகள் பத்து நாடுகளில் பிறந்துள்ளன. இந்தியாவின் அண்டை நாடான சீனாவில் புத்தாண்டு அன்று 33615 குழந்தைகள் பிறந்துள்ளன. இந்த ஆண்டு 140 மில்லியன் குழந்தைகள் பிறக்கும் எனவும் கணக்கிட்டுள்ளது யுனிசெஃப்.
“இந்த ஆண்டு பிறந்துள்ள குழந்தைகளை முற்றிலும் மாறுபட்ட உலகில் பிறந்துள்ளன. கொரோனா பெருந்தொற்று அனைத்தையும் மாற்றியுள்ளது. யுனிசெஃப்பின் உதவி பலருக்கும் தேவைப்படலாம்” என தெரிவித்துள்ளார் யுனிசெஃப் செயல் இயக்குனர் Henrietta Fore. இருப்பினும் இந்தியாவில் கடந்த 2020 புத்தாண்டு தினத்தை ஒப்பிடும் போது இந்த ஆண்டு 7390 குழந்தைகள் குறைவாகவே பிறந்துள்ளன.
Loading More post
ஆஸி. மண்ணில் மூவர்ணக் கொடியுடன் வெற்றி நடைபோட்ட இந்தியா- ஆல்பம்
அன்றே கணித்த சுனில் கவாஸ்கர்: 32 ஆண்டுகால ஆஸி.,யின் சரித்திரத்தை தகர்த்த இந்தியா
வாஷிங்டன் சுந்தர், பன்ட் விளாசல்! - டெஸ்ட் தொடரை வென்றது இந்தியா
"டாக்டர் சாந்தா... அடையாறின் மற்றோர் ஆலமரம்!" - நெட்டிசன்களின் ட்வீட்டாஞ்சலி
அமெரிக்க அதிபர் பதவியேற்பு விழா: பொறுப்பேற்கும் முன்பே பைடன் சந்திக்கும் முதல் சவால்!
"டாக்டர் சாந்தா... அடையாறின் மற்றோர் ஆலமரம்!" - நெட்டிசன்களின் ட்வீட்டாஞ்சலி
மருத்துவத் துறைக்கு தன்னலமற்ற சேவை வழங்கிய மருத்துவர் சாந்தா கடந்துவந்த பாதை
"யாருக்கும் விற்க எங்களிடம் எந்த தரவும் இல்லை!" - சிக்னல் சி.இ.ஓ அருணா சிறப்புப் பேட்டி
பைடன், கமலா பதவியேற்புக்காக 'காரிஸன்' நகரமாகும் வாஷிங்டன் டி.சி... அதென்ன 'காரிஸன்'?