திரையரங்குகளில் 100 சதவீத பார்வையாளர்களை தமிழக அரசு அனுமதியளித்த நிலையில், திரையுலகிலும் மருத்துவ துறை சார்ந்து எதிர்ப்புகள் வலுத்துள்ளது கவனத்துக்குரியது.
தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக, கடந்த மார்ச் மாதம் முதல் திரையரங்குகள் மூடப்பட்டன. கடந்த அக்டோபர் மாதம் மத்திய அரசு திரையரங்குகளுக்கு அனுமதி அளித்தபோதும், கோரோனா தாக்கத்தால் தமிழக அரசு தமிழகத்தில் திரையரங்குகளை திறக்க அனுமதி அளிக்கவில்லை. இதனைத்தொடர்ந்து, அமைச்சர் கடம்பூர் ராஜூவிடம் பலமுறை திரையரங்கு உரிமையாளர்கள் கோரிக்கை வைத்தபோதும், திரையரங்குகளைத் திறக்க முதல்வர் எடப்பாடி பழனிசாமி அனுமதி தரவில்லை.
பின்னர், கொரோனா பரவல் குறையத் தொடங்கியதும், கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 10 ஆம் தேதி முதல், 50 சதவீத பார்வையாளர்களுடன் திரையரங்குகளை திறக்க தமிழக அரசு அனுமதியளித்தது. ஆனால், கொரோனா அச்சம் காரணமாகவும், பெரிய நட்சத்திரங்களின் படங்கள் வெளியாகததாலும், பெரியதளவில் மக்கள் திரையரங்கிற்கு வரவில்லை.
இதனால், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் ஜனவரி 13 வெளியாக இருக்கும் 'மாஸ்டர்' படத்தை வைத்து மீண்டும் ரசிகர்களை திரையரங்கிற்குள் கொண்டு வர திரையரங்கு உரிமையாளர்கள் திட்டமிட்டனர். இதனிடையே, சிலம்பரசனின் ’ஈஸ்வரன்’ படமும் பொங்கலுக்கு வெளியாக இருப்பதாக அப்படக்குழு அறிவித்தது.
இந்நிலையில், முதல்வர் எடப்பாடி பழனிசாமியை நடிகர் விஜய் நேரில் சந்தித்து, திரையரங்கில் 100 சதவீத பார்வையாளர்களை அனுமதிக்க வேண்டும் என கோரிக்கை வைத்தார். சிலம்பரனும் அதே கோரிக்கையை முன்வைத்து அறிக்கை வெளியிட்டார். இந்தப் பின்னணியில், திரையங்கில் 100 சதவீத பார்வையார்களை அனுமதிக்கலாம் என்று தமிழக அரசு தெரிவித்தது.
இதற்கு தமிழ் திரையுலக பிரபலங்களான சிவகார்த்திகேயன், குஷ்பூ சுந்தர், சிலம்பரசன், ராதிகா சரத்குமார், ஹரிஷ் கல்யாண் உட்பட பலர் தங்களது நன்றியினை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு சமூக வலைதளங்கள் மூலமாக தெரிவித்தனர்.
திரையரங்குகளில் 100% பார்வையாளர்களுக்கு அனுமதி அளித்து தமிழ் சினிமா மீண்டும் சிறப்பாக இயங்கிட வழிவகுத்த தமிழக அரசிற்கு நன்றி?? பொங்கலுக்கு வரும் #Master #Eeswaran இரண்டு படங்களும் பெரும் வெற்றி அடைய வாழ்த்துகள்?? @CMOTamilNadu @Kadamburrajuofl @actorvijay @SilambarasanTR_ — Sivakarthikeyan (@Siva_Kartikeyan) January 4, 2021
எங்களது கோரிக்கையை ஏற்று திரையரங்குகளில் 100% பார்வையாளர்களுக்கு அனுமதி அளித்த, தமிழ் திரையுலகிற்கு நம்பிக்கை ஒளியை ஏற்றி வைத்த மாண்புமிகு தமிழக முதல்வருக்கு @CMOTamilNadu
நன்றி!#MasterFilm #Eeswaran #SpreadLove #SilambarasanTR pic.twitter.com/0SOaAbqQeX — Silambarasan TR (@SilambarasanTR_) January 4, 2021
A huge thanks to our H’ble CM @CMOTamilNadu Avl and H’ble minister @Kadamburrajuofl Avl for allowing 100% capacity in theatres. Film industry will flourish leaps n bounds and come back to give best entertainment, being one of the largest economic generating field. Nandri ???? — KhushbuSundar ❤️ (@khushsundar) January 4, 2021
Fantastic to see theatres get 100% occupancy permission from the #tamilnadugovt thanks to @EPSTamilNadu @Kadamburrajuofl #MasterFilm #EeswaranPongal . @actorvijay @SilambarasanTR_ great to see cinema industry getting its foothold back . — Radikaa Sarathkumar (@realradikaa) January 4, 2021
திரையரங்கில்
100% பார்வையாளர்களுக்கு அனுமதியளித்த
தமிழக அரசுக்கு
மனமார்ந்த நன்றிகள்,
முக கவசம் அணிந்து
பாதுகாப்பு விதி முறைகளை கடைபிடித்து,
மகிழ்ச்சி பொங்க,
இந்த பொங்கல் பண்டிகைக்கு வெளிவரும்#மாஸ்டர் #ஈஸ்வரன் திரைப்படங்கள் வெற்றிபெற மனமார்ந்த வாழ்த்துகள்! — Harish Kalyan (@iamharishkalyan) January 4, 2021
இந்த சூழ்நிலையில், நடிகர் அரவிந்த் சாமி தனது ட்விட்டர் பக்கத்தில் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், “இந்த நேரத்தில் 100 சதவீத பார்வையாளர்களைவிட 50 சதவீத பார்வையாளர்கள் இருப்பதே சிறந்தது” என்று பதிவிட்டுள்ளார்.
There are times when 50% is way better than a 100%. This is one of them. — arvind swami (@thearvindswami) January 4, 2021
அதே சமயம், மருத்துவர் ஆனந்த் ஸ்ரீநிவாசன் என்பவரும் இந்த அறிவிப்பு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் தனது பேஸ்புக் பக்கத்தில் “திரையரங்குகளில் மீண்டும் 100 சதவீத பார்வையாளர்களை அனுமதிப்பது தற்கொலைக்கு நிகரானது. சிலருடைய சுய நலத்திற்காகவும், பேராசைக்காகவும் நாங்கள் பலியாக முடியாது” எனக் குறிப்பிட்டுள்ளார்.
நடிகை கஸ்தூரியும் “இந்த முடிவு மிகவும் ஆபத்தானது. ஆகையால் இந்த முடிவை முதல்வர் நடிகர்கள், விநியோகஸ்தர்கள் மறுபரிசீலனை செய்ய வேண்டும்” எனக் கூறியுள்ளார்.
இதனிடையே, திரையரங்கம் போன்ற மூடப்பட்ட அறைகளில் சமூக இடைவெளி இல்லாமல் இருப்பது கொரோனா தொற்று வெடித்து பரவுவதற்கு நாமே ஏற்பாடு செய்தது போன்றதாகும் என்று பொது சுகாதார நிபுணர் பிரதீப் கவுர் கவனத்துக்குரிய கருத்தை முன்வைத்திருக்கிறார்.
இந்த எதிர்ப்பு குரலுக்கு ஆதரவாகவும், எதிராகவும் நெட்சன்கள் தங்களது கருத்துக்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளனர். உருமாறிய கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் நிலவும் சூழலில், திரையரங்குகளில் 100 சதவீத இருக்கைகளை அனுமதிப்பதற்கு எதிரான குரல்கள் முக்கியத்துவம் பெறுகிறது.
Loading More post
கொரோனா தடுப்பூசிக்கான ஒப்புதல் - ஏற்புப் படிவத்தில் கோவாக்சின் குறித்து இருப்பது என்ன?
தமிழகத்தில் முதல் தடுப்பூசியை செலுத்திக்கொண்டார் மதுரை மருத்துவர்!
"இரண்டும் பாதுகாப்பானவை; வதந்திகளை நம்பாதீர்! - கொரோனா தடுப்பூசி பணியை தொடங்கிவைத்த மோடி
'ஜல்லிக்கட்டு நாயகன்' ஓபிஎஸ்! - அலங்காநல்லூரில் முதல்வர் இபிஎஸ் புகழாரம்
அனல் பறக்கும் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு: விளம்பர இடைவேளையின்றி சிறப்பு நேரலை!
பரிசோதனை முழுமைபெறாத கோவாக்சின் தடுப்பூசியை இந்திய அரசு வாங்குவது ஏன்? எழும்பும் கேள்விகள்
ஈஸ்வரன்... போதுமான பொழுதுபோக்கு அனுபவம் தந்ததா? - திரைப்பார்வை
சப்ஜெக்டில் மட்டும் சமூக அக்கறை போதுமா? - 'பூமி' என்னும் சினிமா எழுப்பும் கேள்விகள்!
"நாங்கள் அன்று அழுதோம், சிரித்தோம்..." - அஸ்வின் மனைவியின் உணர்வுபூர்வ பகிர்வு