சமூக வலைதளங்களில் புதிதாக வந்திருக்கும் அமெரிக்கா - இந்தியா மீம்ஸ் இப்போது தமிழகத்திலும் செம ட்ரெண்டிங்கில் உள்ளது. அதுகுறித்த சுவாரஸ்ய தொகுப்பு இது.
பழங்காலத்தில் திண்ணைப் பேச்சுகளுக்கு நம்மூரில் பஞ்சமே இருக்காது. கால ஓட்டம் அனைத்தையும் மாற்றிவிட்டது. அந்த திண்ணை பேச்சு அப்படியே பரிணாம வளர்ச்சி பெற்று சமூக வலைதள போஸ்டுகளாகவும், சேட்களாகவும் மாறிவிட்டன. போட்டோ, வீடியோ, டெக்ஸ்ட் என அனைத்து வடிவிலும் இந்த சமூக வலைத்தளங்களில் நாம் பதிவுகளை பகிரலாம். இருப்பினும் மீம்ஸ்களுக்குதான் எப்போதுமே முன்னுரிமை. இன்றைய ஸ்க்ராலிங் தலைமுறையில் அப்படியே ஒரு லைக்கோ அல்லது ஹார்ட்டினையோ தட்டிவிட்டு, சில நொடிகள் புன்னகைத்தபடி அடுத்த வேலைகளை பார்க்க போய்விடுவோம். தமிழகத்தில் மீம் கிரியேட்டர்கள் என சொல்லிக்கொள்ளும் அளவிற்கு இங்கு ரசிகர் கூட்டம் உண்டு.
வடிவேலு, நேசமணி என அடுக்கடுக்காக பல மீம்ஸ்கள் இங்கு வரலாறு படைத்தது உண்டு. அந்த வகையில் புதிதாக வந்திருப்பது தான் அமேரிக்கா - இந்தியா மீம்ஸ். இப்போது தமிழகத்திலும் செம ட்ரெண்டிங்கில் உள்ளது.
ஒரே விஷயம் அமெரிக்காவிலும், இந்தியாவிலும் நடந்தால் எப்படி இருக்கும் என்பதன் வெளிப்பாடுதான் இந்த அமேரிக்கா - இந்தியா மீம்ஸின் கரு. “அமெரிக்கக்காரன் வந்து ஆட்டம் போட்ட நிலா… ஆடு வெட்டி பொங்கவெச்சு பூசப்போடலாம்டா” என 2008இல் வெளியான அறை எண் 305இல் கடவுள் படத்தில் வரும் ‘அடடா டா’ பாடலில் குறிப்பிட்டிருப்பார் பாடலாசிரியர் பா.விஜய். அப்போது மீம்ஸ் எல்லாம் இல்லையென்றாலும், இப்போது ட்விட்டர், இன்ஸ்டா, ஃபேஸ்புக் என சகல சமூக வலைதளத்திலும் ட்ரெண்டாகி கொண்டிருக்கிறது. வழக்கமாக நம் ஊரில் ட்ரெண்டாகும் மீம்ஸ்களுக்கு வடிவேலுதான் ஆணிவேராக இருப்பார். இம்முறை அதற்கு மாற்றாக நடிகர் சந்தானம் வந்துள்ளார் போல.
சிம்பிளாக அமெரிக்க கொடி, அதற்கு பக்கத்தில் சில வார்த்தைகள். அதேபோல அதற்கு கீழே இந்திய கொடி, அதற்குப் பக்கத்தில் சில வார்த்தைகள் என ஆடியன்ஸிடம் ஏகோபித்த வரவேற்பை பெற்றுள்ளது இந்த அமெரிக்கா - இந்தியா மீம்ஸ்.
கல்வி, அரசியல், நட்பு, வேலை, வீடு, காதல் என சகலமும் இந்த மீம்ஸில் பஞ்சாமில்லாமல் நிரம்பி வழிகின்றன. மீம் க்ரியேட்டர்கள் இதை முதலில் ட்ரெண்ட் செய்திருந்தாலும் சாமானிய சமூக வலைத்தள பயன்பாட்டாளரும் போகிற போக்கில் ஒரு மீம்ஸை சிம்பிளாக தட்டிவிட்டுப் போவதை பார்க்க முடிகிறது. அமெரிக்காவுக்கும், இந்தியாவுக்கும் இடையிலான இந்த மீம்ஸ் சண்டையில் இந்தியர்கள் செமயாக செய்கை செய்து வருகின்றனர். அமெரிக்கர்கள் புலிகேசி மன்னனை போல “போர்… ஆமா போர்” என சொல்லிக் கொண்டு உடைந்து போன வாளை சுழற்றுகின்றனர்.
“உங்க ஊர்ல டிவி ரிமோட் வொர்க் ஆகலனா பேட்டரிய மாத்துவீங்க… ஆனா நாங்க ரிமோட்ட ரெண்டு முறை தட்டுவோம்” என்பதில் ஆரம்பித்து “தம்பி அமெரிக்காவுல தான் இது ரத்தம்… இந்தியாவுல இதுக்கு பேர் தக்காளி சட்னி” என ரகரகமான ராகத்தில் நீள்கின்றன இந்த மீம்ஸ்கள்.
அதே நேரத்தில் இந்த மீம்ஸ்களை யார்? எப்போது ஆரம்பித்தார்கள்? என்பதை ஆராய்வதை விட என்ஜாய் பண்ணுங்க ப்ரோ எனவும் டெக்ஸ்ட் டைப் செய்து போஸ்ட் போடுகின்றனர் சமூக வலைதள பயனர்கள். மேலும் இந்தியாவிலிருந்து அமெரிக்கா சென்றுள்ளவர்களும் அங்கிருந்தபடி இந்த மீம்ஸை போடுவதை பார்க்க முடிகிறது. இந்தியாவுக்கு போட்டியாக பாகிஸ்தானை சேர்ந்தவர்களும் இந்த மீம்ஸ்களை ட்ரெண்ட் செய்ய முயற்சிக்கின்றனர்.
?? : We need new batteries.
?? : pic.twitter.com/3xkuLlTqnZ — Yo Yo Funny Singh (@moronhumor) January 2, 2021
?? : We have not received the wedding Card, so we cannot go to the party .
?? : pic.twitter.com/3n72Lz8dv1 — गुप्ता जी !! (@Aman0142) January 2, 2021
?? ?? pic.twitter.com/x2HRvwpsbA — Vanshika (@vanshika_xoxoxo) January 2, 2021
??: Oh shit! Only one week is left for the exams I should start preparing
??: One day before the exam pic.twitter.com/nLYoLv01aq — Param_Anand07 (@the_aryans119) January 2, 2021
??: *CALLING* TRING-TRING
??: *CALLING* namaskar, hamara desh aur poora vishv aaj covid-19 ki chunauti ka samna kar raha hai...*presses #1* TRING-TRING — Pranav Sapra (@pranavsapra) January 2, 2021
Loading More post
நீதிபதிகள் நியமனம் குறித்த பேச்சு: ஆர்.எஸ்.பாரதிக்கு எதிராக வழக்குத் தொடர அனுமதி
அதானி துறைமுக விரிவாக்கத்தை எதிர்த்து மாபெரும் இணையவழி பதாகைப் போராட்டம்: சீமான் அழைப்பு
"பத்ம விருதுகளை திருப்பியளிக்கவில்லை!" - இளையராஜா விளக்கம்
வசூல் வேட்டை நடத்தும் ‘மாஸ்டர்’ ; 5 நாளில் இத்தனை கோடிகளா!
'சென்னைக்கு வெள்ள அபாயம்!' - காட்டுப்பள்ளி அதானி துறைமுக விரிவாக்கத்திற்கு எதிர்ப்பு ஏன்?
"யாருக்கும் விற்க எங்களிடம் எந்த தரவும் இல்லை!" - சிக்னல் சி.இ.ஓ அருணா சிறப்புப் பேட்டி
பைடன், கமலா பதவியேற்புக்காக 'காரிஸன்' நகரமாகும் வாஷிங்டன் டி.சி... அதென்ன 'காரிஸன்'?
'மீன் வகைகளில் கவனம் முக்கியம்!' - கர்ப்பிணிகளின் தினசரி டயட்டில் இருக்கவேண்டிய உணவுகள்
'சென்னைக்கு வெள்ள அபாயம்!' - காட்டுப்பள்ளி அதானி துறைமுக விரிவாக்கத்திற்கு எதிர்ப்பு ஏன்?