விரைவில் வெளிவர இருக்கும் ’கே.ஜி.எஃப் 2’ மலையாள உரிமையை நடிகர் பிரித்விராஜ் கைப்பற்றியுள்ளார். இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு இருக்கிறார்.
பிரஷாந்த் நீல் இயக்கத்தில் யாஷ், ஸ்ரீநிதி ஷெட்டி நடிப்பில் கன்னடத்தில் கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியான ’கேஜிஎஃப்’ பிரம்மாண்டமான வசூல் சாதனை செய்தது. அதனைத்தொடர்ந்து தமிழ், தெலுங்கு, இந்தி என பல்வேறு மொழிகளில் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியாகி அதிலும் வெற்றியை குவித்தது. இந்த வெற்றியால் ’கேஜிஎஃப் 2’ படத்தின் ஷூட்டிங்கை உற்சாகமுடன் அறிவித்து தற்போது இறுதிக்கட்ட படப்பிடிப்பிலும் ஈடுபட்டு வருகிறது படக்குழு. இதன் இரண்டாம் பாகத்தில் சஞ்சய் தத், பிரகாஷ் ராஜ்,ரவீனா தண்டன் உள்ளிட்டோர் நடிக்கிறார்கள். இந்நிலையில், கேஜிஎஃப் ரசிகர்கள் அப்டேட் கேட்டு வந்த நிலையில், அதன் டீசர் யாஷ் பிறந்தநாளான ஜனவரி 8, காலை 10;18 மணிக்கு வெளியாகும் என்று அப்படத்தின் இயக்குநர் பிரஷாந்த் நீல் நேற்று அறிவித்திருந்தார்.
அதனைத்தொடர்ந்து, நேற்றிரவு நடிகர் பிரித்விராஜ் “நான் கே.ஜி.எஃப் படத்தின் மிகப்பெரிய ரசிகன். நாட்டில் மிகவும் எதிர்பார்க்கப்பட்டப் படங்களில் ஒன்றை நான் வழங்குவதற்கான பாக்கியத்தைப் பெறுவதை விட சிறந்த வழி எதுவும் இல்லை. பிரித்விராஜ் புரடொக்ஷன் ‘கே.ஜி.எஃப் 2’ வழங்குவதை பெருமைக்கொள்கிறது.உங்களைப் போல லட்சக்கணக்கான ரசிகர்கள் போலவே நானும் ராக்கியை காண ஆவலில் இருக்கிறேன்” என்று உற்சாகமுடன் பதிவிட்டுள்ளார். கேஜிஎஃப் முதல் பாகம் வெளியானபோது அதன் தமிழ் உரிமையை கைப்பற்றியவர் நடிகர் விஷால் என்பது குறிப்பிடத்தக்கது.
Loading More post
நீதிபதிகள் நியமனம் குறித்த பேச்சு: ஆர்.எஸ்.பாரதிக்கு எதிராக வழக்குத் தொடர அனுமதி
அதானி துறைமுக விரிவாக்கத்தை எதிர்த்து மாபெரும் இணையவழி பதாகைப் போராட்டம்: சீமான் அழைப்பு
"பத்ம விருதுகளை திருப்பியளிக்கவில்லை!" - இளையராஜா விளக்கம்
வசூல் வேட்டை நடத்தும் ‘மாஸ்டர்’ ; 5 நாளில் இத்தனை கோடிகளா!
'சென்னைக்கு வெள்ள அபாயம்!' - காட்டுப்பள்ளி அதானி துறைமுக விரிவாக்கத்திற்கு எதிர்ப்பு ஏன்?
"யாருக்கும் விற்க எங்களிடம் எந்த தரவும் இல்லை!" - சிக்னல் சி.இ.ஓ அருணா சிறப்புப் பேட்டி
பைடன், கமலா பதவியேற்புக்காக 'காரிஸன்' நகரமாகும் வாஷிங்டன் டி.சி... அதென்ன 'காரிஸன்'?
'மீன் வகைகளில் கவனம் முக்கியம்!' - கர்ப்பிணிகளின் தினசரி டயட்டில் இருக்கவேண்டிய உணவுகள்
'சென்னைக்கு வெள்ள அபாயம்!' - காட்டுப்பள்ளி அதானி துறைமுக விரிவாக்கத்திற்கு எதிர்ப்பு ஏன்?