பட்டுக்கோட்டையில் பொது மக்கள் அதிகம் நடமாட்டம் உள்ள பகுதியில் ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை பெரிய கடைத்தெரு பகுதி எப்பொழுதும் மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதி ஆகும். இப்பகுதியில் பட்டுக்கோட்டை கண்டியன் தெரு பகுதியைச் சேர்ந்தவர் சிரஞ்சீவி (35). இவர் மீது பல்வேறு கொலை வழக்குகள் உள்ள நிலையில் இவரை அடையாளம் தெரியாத மூன்று நபர்கள் ஓட ஓட விரட்டி தலை மற்றும் கழுத்துப் பகுதியில் சரமாரியாக வெட்டியதில் சம்பவ இடத்திலேயே சிரஞ்சீவி பலியானார்.
பொதுமக்கள் அதிகம் நடமாடும் பகுதியில் ரவுடி ஓட ஓட விரட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் பட்டுக்கோட்டையில் பரபரப்பை ஏற்படுத்தியது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பட்டுக்கோட்டை காவல்துறை துணை கண்காணிப்பாளர் புகழேந்தி கணேஷ் மற்றும் போலீசார் வெட்டி கொலை செய்யப்பட்ட சிரஞ்சீவியின் உடலை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் ரவுடி சிரஞ்சீவியை வெட்டி கொன்றவர்கள் யார் முன்விரோதம் காரணமாக வெட்டி கொலை செய்யப்பட்டாரா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை செய்து குற்றவாளிகளை தேடி வருகின்றனர். பட்டுக்கோட்டை பகுதியில் கடந்த ஆறு மாதங்களுக்குள் பத்துக்கும் மேற்பட்ட கொலைகள் நடந்துள்ளதால் பொதுமக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இதுபோல் தொடர் கொலைகள் நடைபெறாமல் இருக்க காவல்துறையினர் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Loading More post
கொரோனா தடுப்பூசிக்கான ஒப்புதல் - ஏற்புப் படிவத்தில் கோவாக்சின் குறித்து இருப்பது என்ன?
தமிழகத்தில் முதல் தடுப்பூசியை செலுத்திக்கொண்டார் மதுரை மருத்துவர்!
"இரண்டும் பாதுகாப்பானவை; வதந்திகளை நம்பாதீர்! - கொரோனா தடுப்பூசி பணியை தொடங்கிவைத்த மோடி
'ஜல்லிக்கட்டு நாயகன்' ஓபிஎஸ்! - அலங்காநல்லூரில் முதல்வர் இபிஎஸ் புகழாரம்
அனல் பறக்கும் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு: விளம்பர இடைவேளையின்றி சிறப்பு நேரலை!
பரிசோதனை முழுமைபெறாத கோவாக்சின் தடுப்பூசியை இந்திய அரசு வாங்குவது ஏன்? எழும்பும் கேள்விகள்
ஈஸ்வரன்... போதுமான பொழுதுபோக்கு அனுபவம் தந்ததா? - திரைப்பார்வை
சப்ஜெக்டில் மட்டும் சமூக அக்கறை போதுமா? - 'பூமி' என்னும் சினிமா எழுப்பும் கேள்விகள்!
"நாங்கள் அன்று அழுதோம், சிரித்தோம்..." - அஸ்வின் மனைவியின் உணர்வுபூர்வ பகிர்வு