தஞ்சாவூர் விபத்து - மேலும் ஒருவர் பலி

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

தஞ்சாவூர் மாவட்டம் வல்லம் பகுதியில் அரசு பேருந்தும் மினி லாரியும் மோதிய விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 10 ஆக உயர்ந்துள்ளது.


Advertisement

திருப்பூரில் இருந்து கும்பகோணம் சென்ற அரசுப் பேருந்தும், தஞ்சாவூரில் இருந்து திருச்சி நோக்கிச் சென்ற மினி லாரியும் நேருக்கு நேர் மோதிக் கொண்டன. இந்த கோர விபத்தில், பேருந்து ஓட்டுநர் மற்றும் மினி லாரி ஓட்டுநர் உட்பட 9 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 21 பேர் படுகாயமடைந்து உயிருக்குப் போராடினர்.
தகவலறிந்து விரைந்து வந்த காவல் துறையினர், அந்தப் பகுதி மக்களுடன் இணைந்து காயமடைந்தவர்களை மீட்டு தஞ்சாவூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வந்த ஒருவர் இன்று உயிரிழந்தார். இந்த விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 10 ஆக உயர்ந்துள்ளது. விபத்தில் உயிரிழந்த 10பேர் குடும்பங்களுக்கு முதலமைச்சர் பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ1 லட்சம் நிதியுதவி வழங்கவும்
உத்தரவிட்டுள்ளார். 


Advertisement

வீடியோ

loading...

Advertisement

Advertisement

Advertisement