சுகர்-ஃப்ரீ மாம்பழங்களுக்கு அமோக வரவேற்பு

சுகர்-ஃப்ரீ மாம்பழங்களுக்கு அமோக வரவேற்பு
சுகர்-ஃப்ரீ மாம்பழங்களுக்கு அமோக வரவேற்பு

உத்தரகண்ட் மாநிலத்தில் விளையும் sugar-free மாம்பழங்களுக்கு மக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. 

Tom Atkin எனப்படும் இந்த வகை மாம்பழங்கள் பர்ப்பிள் நிறத்தில் உள்ளன. உத்தரகண்டின் நைனிடால் பகுதியில் பெருமளவில் இவ்வகை மாம்பழங்கள் விளைகின்றன. உள்நாடு மட்டுமில்லாமல் வெளிநாடுகளிலும் இந்த sugar-free மாம்பழங்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதால் விவசாயிகளும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இயற்கையாக மாம்பழங்களில் உள்ள சக்கரைத் தன்மை இந்த வகை மாம்பழங்களில் வழக்கத்தை விட குறைவாக காணப்படும் என்றும், இதனால் இந்த பழம் சக்கரை வியாதி உள்ளவர்களுக்கு ஏற்ற பழம் என்றும் கூறப்படுகிறது. மாம்பழம் உண்ண ஆசைப்படும் சக்கரை நோய் பாதித்தவர்கள் மத்தியில் இந்த மாம்பழத்திற்கு அமோக வரவேற்புள்ளதால், இதன் விற்பனை பெருமளவு அதிகரித்துள்ளது. 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com