[X] Close >

உலகிலேயே இன்ஸ்டாகிராமில் அதிக ஃபாலோயர்கள் - கிறிஸ்டியானோ ரொனால்டோ புதிய மைல்கல்!

Football-Star-Cristiano-Ronaldo-has-more-number-of-followers-in-Instagram-Site

கால்பந்தாட்ட உலகின் சூப்பர் ஸ்டார் என்றால் அது கிறிஸ்டியானோ ரொனால்டோ தான். உலகின் பட்டிதொட்டி எங்கும் தனது ஆட்டத்தினால் பல கோடி ரசிகர்களின் நெஞ்சை கொள்ளை கொண்டவர் அவர். இந்நிலையில், உலகிலேயே இன்ஸ்டாகிராமில் அதிக ஃபாலோயர்களை கொண்டுள்ள பிரபலமாகியுள்ளார் அவர். இதன் மூலம் உலகின் நெம்பர் ஒன் பிரபலம் என்ற கிரீடத்தையும் அவர் சூடியுளார்.


Advertisement

image

எத்தனை ஃபாலோயர்கள்?


Advertisement

இன்ஸ்டாகிராம் தளத்தில் மட்டுமே ரொனால்டோடவை 250 மில்லியன் பேர் பின் தொடர்கிறார்கள். அதே போல ஃபேஸ்புக் தளத்திலும் அதிக ஃபாலோயர்களை கொண்டுள்ள நபர்களில் ரொனால்டோவே முதலிடத்தில் உள்ளார். ட்விட்டர் தளத்தில் அதிக ஃபாலோயர்களை பெற்ற ஸ்போர்ட்ஸ் ஐகானாக இருப்பவரும் ரொனால்டோ தான். அவருக்கு அடுத்தபடியாக இன்ஸ்டாகிராம் தளத்தில் அமெரிக்க பாப் இசை பாடகி அரியானா கிராண்டே 214 மில்லியன் ஃபாலோயர்களும், ஹாலிவுட் நடிகர் டுவைன் ஜான்சன் (தி ராக்) 209 மில்லியன் ஃபாலோயர்களும் பெற்றுள்ளனர். 


Advertisement

கால்பந்தாட்டத்தில் ரொனால்டோவோடு போட்டி போடும் மெஸ்ஸியை இன்ஸ்டாவில் 174 மில்லியன் பேர் பின் தொடர்கிறார்கள். அதே நேரத்தில் ரொனால்டோ இன்ஸ்ட்டாகிராமில் Paid போஸ்ட்களை பகிர்ந்து 47.8 மில்லியன் அமெரிக்க டாலர்களை கடந்த 2020இல் ஈட்டியுள்ளதாகவும் சொல்லப்படுகிறது. ரொனால்டோவை தவிர்த்து இன்ஸ்டாவில் அதிக ஃபாலோயர்களை கொண்டிருப்பது அந்த தளத்தின் அதிகாரப்பூர்வ பக்கம் தான். மொத்தமாக 382 மில்லியன் பேர் அந்த பக்கத்தை பின் தொடர்கிறார்கள்.

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement
[X] Close