[X] Close >

“அதிமுக தலைமையிலான கூட்டணியில்தான் பாஜக இருக்கிறது” - அமைச்சர் ஜெயக்குமார்

The-BJP-is-in-an-AIADMK-led-alliance-says-minister-jeyakumar

அதிமுக தலைமையிலான கூட்டணியில்தான் பாஜக இருக்கிறது என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.


Advertisement

சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் ஜெயக்குமார் “அதிமுக - பாஜக கூட்டணி நீடிப்பதாக முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சர் ஏற்கெனவே அறிவித்துள்ளனர். அதிமுக தலைமையிலான கூட்டணியில்தான் பாஜக இருக்கிறது. கூட்டணி தொடர்கிறது.

அதிமுகவின் முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமியை ஒருமனதாக அறிவிக்கிறோம். அதிமுகவின் முதல்வர் வேட்பாளர் விஷயத்தில் கிஞ்சித்தும் மாற்றம் இருக்காது. அதிமுக முதல்வர் வேட்பாளரை ஏற்கும் கட்சிகளுடன்தான் கூட்டணி என்று அறிவித்துவிட்டோம். யாராக இருந்தாலும் அதிமுக தலைமையின்கீழ்தான் வந்தாக வேண்டும். கட்சிகளின் கூட்டணி என்பது வேறு. கொள்கை என்பது வேறு. தேர்தலை சந்திக்கவே கூட்டணி வைக்கப்படுகிறது. கூட்டணி விவகாரத்தில் பாஜக தேசிய தலைமை அறிவிப்பதே அதிகாரப்பூர்வமாக இருக்கும்” என்றார்.


Advertisement

image

முன்னதாக அதிமுக பாஜக இடையே கூட்டணி குறித்தும் முதல்வர் வேட்பாளர் குறித்தும் கருத்து வேறுபாடு நிலவி வருகிறது. இதனால் இந்த இருகட்சிகளுக்கு இடையே கூட்டணி நிலைக்குமா எனவும் பாஜக தனித்து போட்டியிட திட்டமிடுகிறதா எனவும் கேள்வி எழுந்துள்ளது.

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement
[X] Close