மேற்கு வங்கத்தில் நேற்று மாலை பாஜக செயற்குழு தலைவர் மீது மூவர் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர்.
மேற்குவங்கம் மாநிலத்தில் பாஜகவின் செயற்குழு தலைவராக இருக்கும் கிருஷ்ணெந்து முகர்ஜி, நேற்றிரவு கொல்கத்தாவிலிருந்து தனது வீட்டிற்கு புறப்பட்டுள்ளார். அப்போது அசன்சோல் என்ற இடத்தில் அவரது கார் வந்தபோது அங்கு நின்று கொண்டிருந்த மூன்று பேர் திடீரென்று துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர். அதிர்ஷ்டவசமாக, முகர்ஜி மீது ஐந்து சுற்று துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டபோதும் காயமின்றி அவர் உயிர் தப்பினார்.
இதுகுறித்து போலீசில் புகார் அளித்துள்ள கிருஷ்ணெந்து முகர்ஜி, தன் மீது ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினர் திட்டமிட்டு துப்பாக்கிச்சூடு நடத்தியதாக குற்றம்சாட்டியுள்ளார்.
துப்பாக்கிச்சூடு நடத்திய முழு சம்பவமும் அங்குள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளதாகவும், அதனடிப்படையில் விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.
கடந்த டிசம்பர் மாதம் மேற்கு வங்க மாநிலம் டயமண்ட் ஹார்பர் தொகுதிக்கு பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா சென்றபோது, அவரது கார் அணிவகுப்பு மீது சிலர் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலுக்கு திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினர்தான் காரணமென பாஜகவினர் குற்றஞ்சாட்டியது குறிப்பிடத்தக்கது.
Loading More post
நீதிபதிகள் நியமனம் குறித்த பேச்சு: ஆர்.எஸ்.பாரதிக்கு எதிராக வழக்குத் தொடர அனுமதி
அதானி துறைமுக விரிவாக்கத்தை எதிர்த்து மாபெரும் இணையவழி பதாகைப் போராட்டம்: சீமான் அழைப்பு
"பத்ம விருதுகளை திருப்பியளிக்கவில்லை!" - இளையராஜா விளக்கம்
வசூல் வேட்டை நடத்தும் ‘மாஸ்டர்’ ; 5 நாளில் இத்தனை கோடிகளா!
'சென்னைக்கு வெள்ள அபாயம்!' - காட்டுப்பள்ளி அதானி துறைமுக விரிவாக்கத்திற்கு எதிர்ப்பு ஏன்?
"யாருக்கும் விற்க எங்களிடம் எந்த தரவும் இல்லை!" - சிக்னல் சி.இ.ஓ அருணா சிறப்புப் பேட்டி
பைடன், கமலா பதவியேற்புக்காக 'காரிஸன்' நகரமாகும் வாஷிங்டன் டி.சி... அதென்ன 'காரிஸன்'?
'மீன் வகைகளில் கவனம் முக்கியம்!' - கர்ப்பிணிகளின் தினசரி டயட்டில் இருக்கவேண்டிய உணவுகள்
'சென்னைக்கு வெள்ள அபாயம்!' - காட்டுப்பள்ளி அதானி துறைமுக விரிவாக்கத்திற்கு எதிர்ப்பு ஏன்?