ஆப்கானிஸ்தானில் கடந்த 2 மாதங்களில் 5 பத்திரிகையாளர்கள் அடுத்தடுத்து படுகொலை செய்யப்பட்ட சம்பவங்கள் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
ஆப்கானிஸ்தானில் மனித உரிமைகளுக்காக ஆதரவாக இருப்பவர்களும், அரசுக்கு ஆதரவாக பிரசாரம் செய்பவர்களும் தீவிரவாதிகளால் படுகொலை செய்யப்பட்டு வருகின்றனர். சமீபகாலமாக இந்த நிகழ்வு அதிகரித்து வருகிறது. கடந்த 2 மாதங்களில் ஆர்வலர்களாக செயல்பட்ட 4 பத்திரிகையாளர்கள் கொடூரமாக கொலை செய்யப்பட்டனர். ஆப்கானிஸ்தானின் புகழ்பெற்ற பத்திரிகையாளர்கள் சங்கமான கஜினி பத்திரிகையாளர்கள் சங்கத்தின் தலைவர் ரஹ்மதுல்லா நெக்சாத் என்பவர் கடந்த மாதம் கிழக்கு ஆப்கானிஸ்தானில் வைத்து சுட்டுக் கொல்லப்பட்டார்.
இதேபோல், பிரபலமான யாமா சியாவஷ் என்கிற தொலைக்காட்சிப் பத்திரிகையாளரான காபூல் என்பவர் நவம்பர் மாதம் அவரின் வீட்டின் அருகிலேயே வெடிகுண்டு வைத்து கொல்லப்பட்டார். இதற்கு அடுத்த சில நாட்களில் இவரைப்போலவே ரேடியோ லிபர்டி என்கிற நிறுவனத்தின் பத்திரிகையாளர் அலியாஸ் தயி என்பவர் கார் வெடிகுண்டு மூலம் கொல்லப்பட்டார்.
மற்றொரு பிரபல தொலைக்காட்சியான இனிகாஸ் தொலைக்காட்சி & வானொலியில் பணியாற்றி வந்த பத்திரிகையாளர் மலாலா மைவான்ட் என்பவர் சில தினங்களுக்கு முன்பு பணிக்குச் செல்லும்போது கொல்லப்பட்டார். மேலும், ஆப்கானிஸ்தானின் முதல் பெண் இயக்குநர்களில் ஒருவரான சபா சஹர் காபூல் துப்பாக்கியால் சுடப்பட்டார். ஆனால், அதிர்ஷ்டவசமாக அவர் தப்பித்தார்.
இந்தப் பத்திரிகையாளர்கள் கொலைச் சம்பவங்களுக்கு எந்த ஆயுதமேந்திய அமைப்பும் இதுவரை பொறுப்பேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால், ஆப்கானிஸ்தான் அரசு, அந்நாட்டின் அரசு அதிகாரிகள் அனைவரும் பத்திரிகையாளர்கள் கொலைக்கு தலிபான் தீவிரவாதிகள் காரணம் எனக் கை காட்டுகின்றனர்.
தொடர்ந்து நடந்து வரும் இந்தச் சம்பவங்களுக்கு ஐ.நா சபை, நேட்டோ, ஐரோப்பிய ஒன்றியம் என பல்வேறு அமைப்புகள் கண்டனம் தெரிவித்து வருகின்றன. 2 மாதங்களில் 4 பத்திரிகையாளர்கள் கொல்லப்பட்ட அதிர்ச்சி மறைவதற்குள் தற்போது இன்னொரு பத்திரிகையாளர் கொலை செய்யப்பட்டுள்ளார்.
பிஸ்மில்லா ஐமக் என்னும் பத்திரிகையாளர் ஆப்கானிஸ்தான் மத்திய மாகாணமான கோரில் வைத்து நேற்று துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டார். பிஸ்மில்லா ஐமக் உள்ளூர் வானொலி நிலையம் ஒன்றின் ஆசிரியராக பணிபுரிந்து வந்தார். இதற்கு முன்பு ஒருமுறை நடந்த கொலை முயற்சியில் இருந்து ஐமக் தப்பிய நிலையில்தான் நேற்று கொலைச் செய்யப்பட்டுள்ளார்.
இவரையும் சேர்த்து ஆப்கானிஸ்தானில் கடந்த இரண்டு மாதங்களில் 5 பத்திரிகையாளர்கள் படுகொலை செய்யப்பட்டிருப்பது தொடர்ந்து அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது. ஆப்கானிஸ்தானில் அரசுக்கும், அரசுக்கு எதிராக போராடும் அமைப்புகளுடன் அடுத்த வாரம் பேச்சுவார்த்தை நடக்க இருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.
Loading More post
நீதிபதிகள் நியமனம் குறித்த பேச்சு: ஆர்.எஸ்.பாரதிக்கு எதிராக வழக்குத் தொடர அனுமதி
அதானி துறைமுக விரிவாக்கத்தை எதிர்த்து மாபெரும் இணையவழி பதாகைப் போராட்டம்: சீமான் அழைப்பு
"பத்ம விருதுகளை திருப்பியளிக்கவில்லை!" - இளையராஜா விளக்கம்
வசூல் வேட்டை நடத்தும் ‘மாஸ்டர்’ ; 5 நாளில் இத்தனை கோடிகளா!
'சென்னைக்கு வெள்ள அபாயம்!' - காட்டுப்பள்ளி அதானி துறைமுக விரிவாக்கத்திற்கு எதிர்ப்பு ஏன்?
"யாருக்கும் விற்க எங்களிடம் எந்த தரவும் இல்லை!" - சிக்னல் சி.இ.ஓ அருணா சிறப்புப் பேட்டி
பைடன், கமலா பதவியேற்புக்காக 'காரிஸன்' நகரமாகும் வாஷிங்டன் டி.சி... அதென்ன 'காரிஸன்'?
'மீன் வகைகளில் கவனம் முக்கியம்!' - கர்ப்பிணிகளின் தினசரி டயட்டில் இருக்கவேண்டிய உணவுகள்
'சென்னைக்கு வெள்ள அபாயம்!' - காட்டுப்பள்ளி அதானி துறைமுக விரிவாக்கத்திற்கு எதிர்ப்பு ஏன்?