இன்றைய தினத்தின் சில முக்கியச் செய்திகள்...
தமிழகம் முழுவதும் பொங்கல் பரிசுத்தொகுப்பு மற்றும் 2500 ரூபாய் இன்று முதல் விநியோகம். டோக்கனில் குறிப்பிடப்பட்டுள்ள நாளில் குடும்ப அட்டைதாரர்கள் பெற்றுக்கொள்ள ஏற்பாடு.
புதுச்சேரியில் 9 மாத இடைவெளிக்கு பிறகு பள்ளிகள் இன்று மீண்டும் திறப்பு. கொரோனா தடுப்பு கட்டுப்பாடுகளுடன் மாணவர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என அறிவிப்பு.
சென்னை உயர் நீதிமன்றத்தின் 50ஆவது தலைமை நீதிபதியாக இன்று பதவியேற்கிறார் நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி. பதவிப்பிரமாணம் செய்து வைக்கிறார் ஆளுநர் பன்வாரிலால் புரோகித்.
விவசாயிகளின் பாதுகாவலனாக இருக்கிறது அதிமுக அரசு. கோவில்பட்டியில் பருத்தி விவசாயிகள் மத்தியில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேச்சு
திமுக ஆட்சிக்கு வந்தவுடன் மாணவர்களின் கல்விக் கடன் ரத்து செய்யப்படும். திமுகவின் மக்கள் கிராம சபை கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் உறுதி.
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஒருபோதும் முதல்வராக முடியாது என ஆதரவாளர்கள் மத்தியில் மு.க.அழகிரி பேச்சு. தனது அரசியல் நிலைப்பாட்டை விரைவில் தெரிவிக்கப்போவதாகவும் அறிவிப்பு.
வேளாண் சட்டங்கள் தொடர்பாக மத்திய அரசு மற்றும் விவசாய அமைப்பினர் இடையே இன்று 7ஆவது கட்ட பேச்சுவார்த்தை. பிரதானமான இரு கோரிக்கைகள் ஏற்கப்படும் வரை போராட்டம் தொடரும் என விவசாயிகள் திட்டவட்டம்
சென்னையில் விடுதிகளில் கொரோனா தொற்றியவர்கள் எண்ணிக்கை 125 ஆக அதிகரிப்பு. நட்சத்திர ஓட்டல்களில் நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டோரையும் பரிசோதனை செய்ய முடிவு.
Loading More post
ஆஸி. மண்ணில் மூவர்ணக் கொடியுடன் வெற்றி நடைபோட்ட இந்தியா- ஆல்பம்
அன்றே கணித்த சுனில் கவாஸ்கர்: 32 ஆண்டுகால ஆஸி.,யின் சரித்திரத்தை தகர்த்த இந்தியா
வாஷிங்டன் சுந்தர், பன்ட் விளாசல்! - டெஸ்ட் தொடரை வென்றது இந்தியா
"டாக்டர் சாந்தா... அடையாறின் மற்றோர் ஆலமரம்!" - நெட்டிசன்களின் ட்வீட்டாஞ்சலி
அமெரிக்க அதிபர் பதவியேற்பு விழா: பொறுப்பேற்கும் முன்பே பைடன் சந்திக்கும் முதல் சவால்!
"டாக்டர் சாந்தா... அடையாறின் மற்றோர் ஆலமரம்!" - நெட்டிசன்களின் ட்வீட்டாஞ்சலி
மருத்துவத் துறைக்கு தன்னலமற்ற சேவை வழங்கிய மருத்துவர் சாந்தா கடந்துவந்த பாதை
"யாருக்கும் விற்க எங்களிடம் எந்த தரவும் இல்லை!" - சிக்னல் சி.இ.ஓ அருணா சிறப்புப் பேட்டி
பைடன், கமலா பதவியேற்புக்காக 'காரிஸன்' நகரமாகும் வாஷிங்டன் டி.சி... அதென்ன 'காரிஸன்'?