"கோவாக்சினுக்கு இன்னும் 3-ஆம் கட்ட பரிசோதனை செய்யப்படவில்லை, அதற்கு முன்பே ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இது ஆபத்தானது" என்று திருவனந்தபுரம் காங்கிரஸ் எம்.பி சசிதரூர் கவலை தெரிவித்தார்.
பாரத் பயோடெக்கின் கோவிட்-19 தடுப்பூசி மற்றும் ஆக்ஸ்போர்டு தடுப்பூசி கோவிஷீல்ட் ஆகியவற்றைப் பயன்படுத்துவதற்கு இந்தியாவின் மருந்துகள் கட்டுப்பாட்டாளர் ஒப்புதல் அளித்ததால், மத்திய அரசு ஒப்புதல் அளித்தவுடன் அதை விநியோகிக்க அரசு தயாராக இருப்பதாக கேரள அரசு கூறியிருந்தது. இதற்கிடையில் சசி தரூர் தனது ட்வீட்டில் "கோவாக்சினுக்கு இன்னும் 3 ஆம் கட்ட சோதனை செய்யப்படவில்லை, அதற்கு முன்பே ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது, இது ஆபத்தானது" என தெரிவித்துள்ளார்.
The Covaxin has not yet had Phase 3 trials. Approval was premature and could be dangerous. @drharshvardhan should please clarify. Its use should be avoided till full trials are over. India can start with the AstraZeneca vaccine in the meantime. https://t.co/H7Gis9UTQb
கேரள மாநில சுகாதார அமைச்சர் கே.கே. ஷைலாஜா, மத்திய அரசு ஒப்புதல் அளித்தவுடன் தடுப்பூசி விநியோகிக்க மாநில அரசு தயாராக உள்ளது என்றார். "மத்திய அரசின் அறிவுறுத்தலின்படி நாங்கள் தடுப்பூசியைப் பயன்படுத்துவோம். தடுப்பூசி விநியோகத்துக்கு தேவையான குளிர்சாதன பெட்டி (ஐ.எல்.ஆர்), குளிர் பெட்டி போன்றவை தயாராக உள்ளன. மேலும் மாநிலம் முழுவதும் தடுப்பூசி விநியோகிக்கும் இடங்களையும் இறுதி செய்துள்ளோம்"என்று அவர் ஊடகங்களுக்கு தெரிவித்தார்.
கோவாக்சின் பற்றிய தரூரின் விமர்சனம் குறித்து அவரிடம் கேட்டபோது, தடுப்பூசிகள் குறித்து மாநில அரசு இன்னும் அதிகாரபூர்வ அறிவிப்பைப் பெறவில்லை என்றும், பின்னர் அது குறித்து கருத்து தெரிவிப்பதாகவும் கூறினார்.
Loading More post
நான் வழிகாட்டியாக உள்ள ‘மக்கள் பாதை’ அமைப்பு அரசியலில் பங்கேற்கக்கூடும்: சகாயம்
நார்வே அதிர்ச்சி: பைசர் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்ட 23 முதியவர்கள் மரணம்
ரஷ்யாவிடம் எஸ்-400 ஏவுகணைகளை வாங்கும் இந்தியாவுக்கு அமெரிக்கா எச்சரிக்கை!
தடுப்பூசி நம்பகமானதாக இருந்தால், ஏன் ஆட்சி செய்பவர்கள் போடவில்லை?! - காங்கிரஸ்
உ.பி: அறுவை சிகிச்சை வார்டில் ஹாயாக படுத்துக்கிடந்த தெருநாய்.. வைரல் வீடியோ
திடீர் மழையால் 'கருப்பான' பொங்கல்: நீரில் மூழ்கிய பயிர்கள்... வேதனையில் விவசாயிகள்!
பரிசோதனை முழுமைபெறாத கோவாக்சின் தடுப்பூசியை இந்திய அரசு வாங்குவது ஏன்? எழும்பும் கேள்விகள்
ஈஸ்வரன்... போதுமான பொழுதுபோக்கு அனுபவம் தந்ததா? - திரைப்பார்வை
சப்ஜெக்டில் மட்டும் சமூக அக்கறை போதுமா? - 'பூமி' என்னும் சினிமா எழுப்பும் கேள்விகள்!
"நாங்கள் அன்று அழுதோம், சிரித்தோம்..." - அஸ்வின் மனைவியின் உணர்வுபூர்வ பகிர்வு