இமாச்சல பிரதேசம் மாநிலம் அடல் சுரங்கப்பாதை அருகே பனிப்பொழிவில் சிக்கித் தவித்த 300-க்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகளை காவல்துறை மீட்டுள்ளது
இமாச்சல பிரதேசம் ரோஹ்தாங்கில் உள்ள அடல் சுரங்கப்பாதை அருகே கடும் பனிப்பொழிவில் சிக்கித் தவித்த 300-க்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகளை இமாச்சலப் பிரதேச காவல்துறையினர் கடும் போராட்டங்களுக்கு பின்னர் மீட்டுள்ளனர். சில சுற்றுலாப் பயணிகள் சனிக்கிழமை காலை சுரங்கப்பாதையைத் தாண்டிவிட்டனர். ஆனால் மாலையில், பனிப்பொழிவு காரணமாக லாஹவுலில் எந்த இடத்தையும் கண்டுபிடிக்க முடியவில்லை. அவர்கள் மணாலிக்குத் திரும்பும்போது நடுப்பகுதியில் சிக்கித் தவித்ததாக குலு எஸ்.பி. கவுரவ் சிங் தெரிவித்தார்.
உடனடியாக குலு போலீசாருடன் இணைந்து லஹவுல்-ஸ்பிட்டி காவல்துறை மாலையில் சுரங்கப்பாதை வழியாக வாகனங்களை அனுப்பியது. இருப்பினும், பனி மற்றும் வழுக்கும் சாலைகள் காரணமாக மணாலிக்கு செல்லும்போது இந்த வாகனங்களும் நடுப்பகுதியில் சிக்கின என்று கவுரவ் சிங் கூறினார். 48 இருக்கைகள் கொண்ட பஸ், 24 இருக்கைகள் கொண்ட போலீஸ் பஸ் உட்பட சுமார் 70 வாகனங்கள் மீட்கப்பட்டன. மீட்பு நடவடிக்கை சனிக்கிழமை மாலை தொடங்கி நள்ளிரவுக்குப் பின் தொடர்ந்தது. சிக்கித் தவித்த அனைத்து சுற்றுலாப் பயணிகளும் துண்டி மற்றும் சுரங்கப்பாதையின் தெற்கு போர்ட்டலில் இருந்து அதிகாலை வரை மீட்கப்பட்டு மணாலியில் பாதுகாப்பான இடங்களுக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
வானிலை ஆய்வுத் துறையின் முன்னறிவிப்பின்படி, சுரங்கப்பாதையைச் சுற்றி கடுமையான பனிப்பொழிவு வரும் நாட்களில் எதிர்பார்க்கப்படுகிறது. செவ்வாயன்று இமாச்சல பிரதேசத்தில் கடுமையான பனிப்பொழிவுக்கு மஞ்சள் வானிலை எச்சரிக்கை விடுத்து, ஜனவரி 3 முதல் 5 வரை மற்றும் ஜனவரி 8 ஆம் தேதி மாநிலத்தின் நடுப்பகுதி மற்றும் உயரமான மலைப்பகுதிகளில் மழை மற்றும் பனிப்பொழிவு இருக்கும் என்று வானிலை மையம் கணித்துள்ளது.
Loading More post
சசிகலா இணைப்பு விவகாரம் : இபிஎஸ்–ஓபிஎஸ் உடனான பேச்சுவார்த்தையில் அதிருப்தியடைந்த அமித்ஷா
யார், யாருக்கெல்லாம் தபால் ஓட்டு : தேர்தல் ஆணையம் விளக்கம்
’நமது முதல்வர் விஜயகாந்த், நமது சின்னம் முரசு’ - எல்.கே சுதீஷ் பதிவு!
ஐயூஎம்எல் 3, மமக 2 - திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு கையெழுத்து!
அதிமுக-பாஜக தொகுதி பங்கீடு பற்றிய முழுத் தகவல் 2 நாட்களில் தெரியவரும் - எல்.முருகன்
அதிமுகவுடன் அதிருப்தி... தேமுதிகவிடம் எஞ்சியிருக்கும் 'வாய்ப்புகள்' என்னென்ன? - ஒரு பார்வை
அதிகரிக்கும் சிலிண்டர் விலை.. சின்ன சின்ன கவனம் போதும்.. கேஸ் மிச்சப்படுத்தும் 11 வழிகள்!
வன்னியர்களுக்கு 10.5% சதவீத இடஒதுக்கீடு : சாத்தியமா, சட்டச்சிக்கல் உள்ளதா? - விரிவான அலசல்
வாழ்வா, சாவா போராட்டத்தில் கம்யூனிஸ்ட், காங்கிரஸ்... எப்படி இருக்கிறது கேரள தேர்தல் களம்?