இயற்கை உபாதை கழிக்க சென்ற இடத்தில் தம்மிடம் தவறாக நடக்க முயன்ற உறவினரை பெண் ஒருவர் கொலை செய்து விட்டு காவல் நிலையத்தில் சரணடைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் அருகே அல்லிமேடு கிராமத்தைச் சேர்ந்தவர் கௌதமி(19). இவர் இயற்கை உபாதை கழிப்பதற்காக ஊரை விட்டு சற்று தொலைவிற்கு சென்றதாகத் தெரிகிறது. அப்போது அவரது உறவினரான அஜித்குமார்(25) கௌதமியை பின் தொடர்ந்து வந்து கத்தியை காட்டி மிரட்டி தவறாக நடக்க முயற்சி செய்ததாக சொல்லப்படுகிறது.
இந்நிலையில் அஜித்குமாரிடம் கத்தியை பிடுங்கிய கௌதமி, அஜித்குமாரை சரமாரியாக வெட்டியதில், அஜித்குமார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதனைத்தொடர்ந்து சோழவரம் காவல் நிலையத்திற்கு சென்று சரண் அடைந்த கெளதமி நடந்தவற்றை கூறியிருக்கிறார்.
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், அஜித்குமார் சடலத்தை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சரண் அடைந்த கெளதமியிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Loading More post
ஆஸி. மண்ணில் மூவர்ணக் கொடியுடன் வெற்றி நடைபோட்ட இந்தியா- ஆல்பம்
அன்றே கணித்த சுனில் கவாஸ்கர்: 32 ஆண்டுகால ஆஸி.,யின் சரித்திரத்தை தகர்த்த இந்தியா
வாஷிங்டன் சுந்தர், பன்ட் விளாசல்! - டெஸ்ட் தொடரை வென்றது இந்தியா
"டாக்டர் சாந்தா... அடையாறின் மற்றோர் ஆலமரம்!" - நெட்டிசன்களின் ட்வீட்டாஞ்சலி
அமெரிக்க அதிபர் பதவியேற்பு விழா: பொறுப்பேற்கும் முன்பே பைடன் சந்திக்கும் முதல் சவால்!
"டாக்டர் சாந்தா... அடையாறின் மற்றோர் ஆலமரம்!" - நெட்டிசன்களின் ட்வீட்டாஞ்சலி
மருத்துவத் துறைக்கு தன்னலமற்ற சேவை வழங்கிய மருத்துவர் சாந்தா கடந்துவந்த பாதை
"யாருக்கும் விற்க எங்களிடம் எந்த தரவும் இல்லை!" - சிக்னல் சி.இ.ஓ அருணா சிறப்புப் பேட்டி
பைடன், கமலா பதவியேற்புக்காக 'காரிஸன்' நகரமாகும் வாஷிங்டன் டி.சி... அதென்ன 'காரிஸன்'?