அமெரிக்கா, ஜப்பான், பிரேசில் உள்ளிட்ட 13 நாடுகளில் அமெரிக்க நிறுவனமான மார்னிங் கன்சல்ட் நடத்திய ஆய்வில் உலகத் தலைவர்களிடையே பிரதமர் மோடி மிக செல்வாக்கு வாய்ந்தவர் (55%) என மதிப்பிடப்பட்டுள்ளார்.
இந்தியாவுக்கு பெருமை சேர்க்கும் மற்றொரு விஷயமாக, பிரதமர் நரேந்திர மோடியை உலகின் மிகவும் பிரபலமான தலைவராக அமெரிக்க ஆராய்ச்சி நிறுவனம் மதிப்பிட்டுள்ளதாக பாஜக தலைவரும் மாநிலங்களவை எம்.பி.யுமான ஜே.பி.நட்டா தெரிவித்தார். "நமது பிரதமர் நரேந்திர மோடி அமெரிக்க ஆராய்ச்சி நிறுவனமான மார்னிங் கன்சல்டால் உலக தலைவர்களிடையே மிக உயர்ந்ததாக மதிப்பிடப்பட்டார். பல்வேறு பிரச்சினைகளை திறம்பட கையாண்டதற்காகவும், கோவிட் -19 நெருக்கடியை நிர்வகிப்பதற்காகவும் அவர் மீண்டும் மிகவும் பிரபலமான அரசாங்கத் தலைவராக உருவெடுத்துள்ளார், ”என்று ட்விட்டரில் நட்டா கூறினார். "இந்த மதிப்பீடு அவரது திறமையான தலைமை மற்றும் கடின உழைப்புக்கு சான்றாகும், இந்த சவாலான காலங்களில் அனைத்து உலகளாவிய தலைவர்களிக்கிடையே பிரதமர் மோடி முதலிடத்தில் உள்ளார்”என்றும் அவர் கூறினார்.
மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்கும் பிரதமர் மோடியைப் பாராட்டியதோடு, “பிரதமர் மோடியின் புகழ் மற்றும் நம்பகத்தன்மை உலகளவில் அங்கீகரிக்கப்பட்டுள்ளது உண்மையில் இது இந்தியாவுக்கு ஒரு பெருமையான தருணம்” என ட்விட்டரில் தெரிவித்தார். மத்திய சுற்றுச்சூழல் அமைச்சர் பிரகாஷ் ஜவடேகரும் பிரதமரை வாழ்த்தினார், இது நாட்டிற்கு பெருமை அளிக்கும் விஷயம் என்று அவர் கூறினார்.
Loading More post
நான் வழிகாட்டியாக உள்ள ‘மக்கள் பாதை’ அமைப்பு அரசியலில் பங்கேற்கக்கூடும்: சகாயம்
நார்வே அதிர்ச்சி: பைசர் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்ட 23 முதியவர்கள் மரணம்
ரஷ்யாவிடம் எஸ்-400 ஏவுகணைகளை வாங்கும் இந்தியாவுக்கு அமெரிக்கா எச்சரிக்கை!
தடுப்பூசி நம்பகமானதாக இருந்தால், ஏன் ஆட்சி செய்பவர்கள் போடவில்லை?! - காங்கிரஸ்
உ.பி: அறுவை சிகிச்சை வார்டில் ஹாயாக படுத்துக்கிடந்த தெருநாய்.. வைரல் வீடியோ
திடீர் மழையால் 'கருப்பான' பொங்கல்: நீரில் மூழ்கிய பயிர்கள்... வேதனையில் விவசாயிகள்!
பரிசோதனை முழுமைபெறாத கோவாக்சின் தடுப்பூசியை இந்திய அரசு வாங்குவது ஏன்? எழும்பும் கேள்விகள்
ஈஸ்வரன்... போதுமான பொழுதுபோக்கு அனுபவம் தந்ததா? - திரைப்பார்வை
சப்ஜெக்டில் மட்டும் சமூக அக்கறை போதுமா? - 'பூமி' என்னும் சினிமா எழுப்பும் கேள்விகள்!
"நாங்கள் அன்று அழுதோம், சிரித்தோம்..." - அஸ்வின் மனைவியின் உணர்வுபூர்வ பகிர்வு