ஹரியானாவில் கடந்த மூன்று நாட்களில் இரண்டாவது ஆணவக்கொலை பதிவாகியுள்ளது. காதல் திருமணம் செய்த 23 வயது இளைஞர் நீரஜ், தனது மனைவியின் சகோதர்களால் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது.
ஹரியானாவை சேர்ந்த 23 வயதான நீரஜ், நேற்று இரவு பானிபட்டின் பரபரப்பான சந்தை பகுதியில் குத்தி கொலைசெய்யப்பட்டார், மேலும் இதில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் சிசிடிவி காட்சிகளில் ஓடிவருவதைக் காண முடிகிறது, இந்த கொலை தொடர்பாக காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்திருந்தாலும், நீரஜைக் ஒரு டஜன் தடவைக்கும் மேல் குத்திய குற்றவாளிகளை அவர்கள் இன்னும் கைது செய்யவில்லை.
புகார்தாரர் மற்றும் நீரஜின் மூத்த சகோதரர் ஜெகதீஷ் கூறுகையில், "அவர்கள் நீண்ட காலமாக என் சகோதரனை அச்சுறுத்தி வந்தனர், நாங்கள் போலீஸ் பாதுகாப்பை நாடினோம், ஆனால் எங்கள் கோரிக்கை புறக்கணிக்கப்பட்டது. அவர்கள் மீண்டும் எங்களை அழைத்தார்கள், அதிக இறப்புகள் ஏற்படும் என்று சொன்னார்கள்" என்று சவக்கிடங்கிற்கு வெளியே நின்றபடி சொன்ன அவர், போலீஸ் தங்கள் கோரிக்கை தொடர்பாக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் குற்றம் சாட்டினார்.
“ஒன்றரை மாதங்களுக்கு முன்புதான் நீரஜின் திருமணம் நடந்தது. ஏற்கனவே இந்த விவகாரத்தில் பெண்ணின் குடும்பத்தினரும், ஆணின் குடும்பத்தினரும் திருமணத்திற்கு ஒப்புக் கொண்டனர், இது கிராம பஞ்சாயத்து கூட்டத்தில் எழுத்துப்பூர்வமாக வழங்கப்பட்டது. ஆனால் இதற்கு அந்த பெண்ணின் சகோதரர்கள் ஒப்புதல் அளிக்கவில்லை, அவர்கள் தொடர்ந்து தம்பதியரை அச்சுறுத்தியுள்ளனர்" என்று துணை போலீஸ் சூப்பிரண்டு சதீஷ்குமார் வாட்ஸ் கூறினார்.
Loading More post
அறுவைசிகிச்சைக்காக சில நாட்கள் ஓய்வு: கமல் அறிவிப்பு
"தென்மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழைக்கு வாய்ப்பு” -சென்னை வானிலை ஆய்வு மையம்
செங்கல்பட்டு டோல்கேட்: கூட்ட நெரிசலால் வாகன ஓட்டிகள் அவதி
திமுகவில் இணைந்த ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள்
பாலக்கோட் தாக்குதல் பற்றி முன்பே அறிந்திருந்த அர்னாப்? கசிந்த வாட்ஸ்அப் உரையாடல்
கொரோனா தடுப்பூசியை யார் போடலாம்; யார் போடக்கூடாது? கோவாக்சின் பற்றிய முழுத் தகவல்
திடீர் மழையால் 'கருப்பான' பொங்கல்: நீரில் மூழ்கிய பயிர்கள்... வேதனையில் விவசாயிகள்!
பரிசோதனை முழுமைபெறாத கோவாக்சின் தடுப்பூசியை இந்திய அரசு வாங்குவது ஏன்? எழும்பும் கேள்விகள்
ஈஸ்வரன்... போதுமான பொழுதுபோக்கு அனுபவம் தந்ததா? - திரைப்பார்வை
சப்ஜெக்டில் மட்டும் சமூக அக்கறை போதுமா? - 'பூமி' என்னும் சினிமா எழுப்பும் கேள்விகள்!