நிவர் மற்றும் புரெவி புயலால் பாதிக்கப்பட்டுள்ள சுமார் 5 லட்சம் விவசாயிகளுக்கு ரூ.600 கோடி இழப்பீடாக வழங்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.
இதுகுறித்து முதலமைச்சர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “விவசாயிகள் வங்கி கணக்கில் ஜனவரி 7 ஆம் தேதி முதல் நேரடியாக நிவாரணம் வரவு வைக்கப்படும். மானாவாரி மற்றும் பாசன வசதி பெற்ற நெற்பயிர்களுக்கு ஹெக்டேர் ஒன்றுக்கு ரூ.13,500க்கு பதில் ரூ.20,000 வழங்கப்படும். 2 ஹெக்டேர் உச்ச வரம்பின்றி பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இடுபொருள் நிவாரணம் வழங்கப்படும். இதற்காக அரசு ரூ. 600 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது. சுமார் 5 லட்சம் பேர் பயனடைவர்.
பல்லாண்டு கால பயிர்களுக்கு நிவாரணத்தொகை ஹெக்டேர் ஒன்றுக்கு ரூ.25 ஆயிரம் ஆக உயர்த்தி வழங்கப்படும். அனைத்து மானாவாரி பயிர்களுக்கும் இடுபொருள் நிவாரணத் தொகை ஹெக்டேருக்கு ரூ.10 ஆயிரம் ஆக உயர்த்தி வழங்கப்படும். நிவர் மற்றும் புரெவி புயல் பாதிப்புக்காக ரூ. 5.264.38 கோடி தேவை என மத்திய அரசிடம் வலியுறுத்தியுள்ளதாக முதல்வர் தெரிவித்துள்ளார்.
Loading More post
சொந்த மண்ணில் ஆஸ்திரேலியாவை வெளுத்து வாங்கிய இந்திய அணி - மேட்ச் ரிவ்யூ
சசிகலா ரிலீஸாகும் நாளில் ஜெயலலிதா நினைவிடம் திறப்பு!
’டீம்க்கு கிடைத்த வெற்றி’.. ’தமிழக வீரர்கள் சிறப்பு’ - முதல்வர், ஸ்டாலின் வாழ்த்து!
“பிரைவஸி பாலிசி மாற்றங்களை கைவிடுங்கள்” வாட்ஸ் அப் சி.இ.ஓ-வுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்
ஆஸி. மண்ணில் மூவர்ணக் கொடியுடன் வெற்றி நடைபோட்ட இந்தியா- ஆல்பம்
"டாக்டர் சாந்தா... அடையாறின் மற்றோர் ஆலமரம்!" - நெட்டிசன்களின் ட்வீட்டாஞ்சலி
மருத்துவத் துறைக்கு தன்னலமற்ற சேவை வழங்கிய மருத்துவர் சாந்தா கடந்துவந்த பாதை
"யாருக்கும் விற்க எங்களிடம் எந்த தரவும் இல்லை!" - சிக்னல் சி.இ.ஓ அருணா சிறப்புப் பேட்டி
பைடன், கமலா பதவியேற்புக்காக 'காரிஸன்' நகரமாகும் வாஷிங்டன் டி.சி... அதென்ன 'காரிஸன்'?