கொரோனா தடுப்பூசியை பாஜகவின் தடுப்பூசி எனவும், அதனால் தடுப்பூசி போடப் போவதில்லை எனவும் அகிலேஷ் யாதவ் கூறியிருப்பது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.
கொரோனா வைரசை கட்டுப்படுத்த நாடு முழுவதும் அவசரகால தேவைகளுக்கு, கோவிஷல்டு தடுப்பூசியை பயன்படுத்த மத்திய அரசு அமைத்துள்ள நிபுணர்கள் குழு பரிந்துரை செய்துள்ளது.
இங்கிலாந்தின் ஆக்ஸ்போர்டு பல்கலை கழகம், அஸ்ட்ரஜெனகா மருந்து நிறுவனத்துடன் இணைந்து கோவிஷல்டு தடுப்பூசியை தயாரித்துள்ளது.
இதனையொட்டி கொரோனா தடுப்பூசி போடுவதற்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தடுப்பூசி ஒத்திகை நிகழ்வு நாடு முழுவதும் நடத்தப்பட்டு வருகிறது.
இந்தநிலையில், உத்தரப்பிரதேச மாநில முன்னாள் முதல்வரும், சமாஜ்வாதி கட்சியின் தலைவருமான அகிலேஷ் யாதவ், பாஜகவின் தடுப்பூசியை நம்ப முடியாது எனத் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர், " நான் இப்போது தடுப்பூசி போடப் போவதில்லை. பாஜகவின் தடுப்பூசியை நான் எப்படி நம்புவது?. எங்கள் அரசு அமையும்போது அனைவரும் இலவச தடுப்பூசியைப் பெறுவார்கள். எங்களால் பாஜகவின் தடுப்பூசியைச் செலுத்திக்கொள்ள முடியாது" எனக் கூறியுள்ளார்.
Loading More post
“வன்னியர்களுக்கான இடஒதுக்கீடுதான் பாமக குறைவான தொகுதிகளை பெறக்காரணம்” - அன்புமணி பேட்டி
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்!
அரசு பஸ் ஊழியர்களின் வேலைநிறுத்தம் வாபஸ்
"அதிகாரம், பண பலத்திற்கு முன்னால் யாராலும் தாக்கு பிடிக்க முடியாது" - ராகுல் காந்தி
தமிழக தேர்தல்: முடிவானது அதிமுக - பாமக தொகுதி பங்கீடு!
வாழ்வா, சாவா போராட்டத்தில் கம்யூனிஸ்ட், காங்கிரஸ்... எப்படி இருக்கிறது கேரள தேர்தல் களம்?
கவுன்டவுனை தொடங்கிய கமல்: மூன்றாம் அணி இலக்கை நெருங்குகிறதா மக்கள் நீதி மய்யம்?
குழந்தைகளுக்கு தேவையான 'வைட்டமின் டி' உடலில் சேருவதை உறுதிசெய்வது எப்படி? - ஒரு வழிகாட்டி
இந்திய அணிதான் 'டார்கெட்'... மைக்கேல் வாகன் கக்குவது கருத்துகளா, அபத்தங்களா? - ஒரு பார்வை