இன்றைய தினத்தின் சில முக்கியச் செய்திகள்...
அனைத்து மாநிலங்களிலும் இன்று கொரோனா தடுப்பூசி செலுத்தும் ஒத்திகை. நாடு முழுவதும் சிறப்பு ஏற்பாடுகள்.
தமிழகத்தில் சென்னை, திருவள்ளூர், நெல்லை, கோவை, நீலகிரி மாவட்டங்களில் கொரோனா தடுப்பூசி ஒத்திகை. 17 இடங்களில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல்.
இந்தியாவில் கோவிஷீல்டு கொரோனா தடுப்பு மருந்துக்கு ஒப்புதல் அளிக்க மத்திய மருந்துகள் தர கட்டுப்பாட்டு அமைப்பு பரிந்துரை. ஓரிருநாளில் மத்திய அரசு ஒப்புதல் தரும் என எதிர்பார்ப்பு.
வரும் சட்டப்பேரவைத் தேர்தல் திமுகவின் வாரிசு அரசியலுக்கு முடிவு கட்டும். மதுரையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேச்சு.
பொய்க்கு மேல் பொய்களை அவிழ்த்து விடுகிறார் முதலமைச்சர் பழனிசாமி. தொண்டர்களுக்கு எழுதிய கடிதத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு.
மருத்துவப் படிப்பில் சேருவதற்காக போலி நீட் சான்று அளித்த மாணவியின் தந்தை பெங்களூருவில் கைது.
வேளாண் சட்டங்களை திரும்பப்பெற கோரி ஒரு மாதத்துக்கும் மேலாக போராடும் விவசாயிகள். ஹரியானாவில் பெட்ரோல் நிலையங்களை மூடப்போவதாக எச்சரிக்கை.
இதுவரை இல்லாத அளவாக டிசம்பரில் ஜிஎஸ்டி வசூல் ஒரு லட்சத்து 15 ஆயிரம் கோடி ரூபாயாக அதிகரிப்பு. முந்தைய ஆண்டுடன் ஒப்பிடும் போது 12 சதவீதம் அதிகம்.
ஆஸ்திரேலிய டெஸ்ட் கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணியில் நடராஜன் சேர்ப்பு. வேகப்பந்து வீச்சாளர் உமேஷ் யாதவுக்கு காயம் ஏற்பட்டதால் தமிழக வீரருக்கு வாய்ப்பு.
Loading More post
வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கிறார்களா? இதோ இந்த எண்ணிற்கு வாட்ஸ் அப்பில் புகார் அளிக்கலாம்
திமுகவுடனான தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை சுமுகமாக முடிந்தது - கே.எஸ்.அழகிரி
பாஜகவுக்கு கன்னியாக்குமரி மக்களவைத் தொகுதி : அதிமுக - பாஜக தொகுதி பங்கீடு நிறைவு?
கலங்க வைக்கும் தேவாவின் கணீர் குரல் - மண்வாசம் வீசும் கர்ணனின் ’பண்டாரத்தி புராணம்’ பாடல்!
வன்னியர்களுக்கு 10.5% உள் இடஒதுக்கீடு வழங்கப்பட்டதற்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் வழக்கு
அதிமுகவுடன் அதிருப்தி... தேமுதிகவிடம் எஞ்சியிருக்கும் 'வாய்ப்புகள்' என்னென்ன? - ஒரு பார்வை
அதிகரிக்கும் சிலிண்டர் விலை.. சின்ன சின்ன கவனம் போதும்.. கேஸ் மிச்சப்படுத்தும் 11 வழிகள்!
வன்னியர்களுக்கு 10.5% சதவீத இடஒதுக்கீடு : சாத்தியமா, சட்டச்சிக்கல் உள்ளதா? - விரிவான அலசல்
வாழ்வா, சாவா போராட்டத்தில் கம்யூனிஸ்ட், காங்கிரஸ்... எப்படி இருக்கிறது கேரள தேர்தல் களம்?