[X] Close >

'அந்தாதூன்' தமிழ் ரீமேக் 'அந்தகன்': போஸ்டர் வெளியீடு!

Andhagan-is-the-title-of-Andhadhun-Tamil-remake

'அந்தாதூன்' தமிழ் ரீமேக்கின் ஃபர்ஸ்ட் லுக் டைட்டில் போஸ்டர் இன்று வெளியிடப்பட்டது.


Advertisement

2018 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் இந்தியில் ஸ்ரீராம் ராகவன் இயக்கத்தில் வெளியாகி விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் பெரும் சாதனை செய்திருந்தது 'அந்தாதூன்' திரைப்படம். ரூ.40 கோடியில் எடுக்கப்பட்ட இப்படம் ரூ.450 கோடி வசூல் செய்தது. இந்தப் படத்தில் ஆயூஷ்மான் குரானா, தபு, ராதிகா ஆப்தே உள்ளிட்டவர்கள் நடித்திருந்தனர்.

image


Advertisement

கடந்த ஆண்டு சிறந்த நடிப்பிற்கான ஆயூஷ்மான் குரானாவுக்கு தேசிய விருது, சிறந்த இந்திப் படம், சிறந்த திரைக்கதை ஆகிய பிரிவுகளில் மூன்று தேசிய விருதுகளை 'அந்தாதூன்' அள்ளியது. இந்தப் படத்தின் தமிழ் ரீமேக்கை 'பொன்மகள் வந்தாள்' பட இயக்குநர் ஜே.ஜே ஃப்ரெட்ரிக் இயக்க, நடிகர் பிரஷாந்த் நடிக்கிறார். தபு கேரக்டரில் நடிகை சிம்ரன் நடிக்கிறார். சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார்.

image

இந்நிலையில், அந்தாதூன் தமிழ் ரீமேக்கின் ஃபர்ஸ்ட் லுக் டைட்டில் போஸ்டர் இன்று வெளியிடப்பட்டது. படத்திற்கு 'அந்தகன்' எனப் பெயரிடப்பட்டுள்ளது. முன்னதாக கிறிஸ்துமஸ் தினத்தையொட்டி ஸ்பெஷல் வீடியோ ஒன்றையும் படக்குழு வெளியிட்டிருந்தது.


Advertisement
Advertisement:

Advertisement

Advertisement

Advertisement
[X] Close