[X] Close >

இந்திய டெஸ்ட் அணியில் நடராஜன் சேர்ப்பு

Natarajan-joins-Indian-Test-team

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3-வது டெஸ்ட் போட்டியில், இந்திய அணியில் நடராஜன் சேர்க்கப்பட்டுள்ளார்.


Advertisement

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக மெல்போர்னில் நடந்த 2-வது டெஸ்ட் போட்டியில் இந்திய வேகப்பந்து வீச்சாளர் உமேஷ் யாதவுக்கு காலில் காயம் ஏற்பட்டது. இதையடுத்து அவர் பாதியில் மைதானத்தில் இருந்து வெளியேறினார்.

இந்த நிலையில் காயம் காரணமாக உமேஷ் யாதவ் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி 2 போட்டிகளில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். அவர் நாடு திரும்புகிறார்.


Advertisement

இதையடுத்து சிட்னியில் வரும் 7ந் தேதி தொடங்கும் டெஸ்ட் போட்டியில் உமேஷ் யாதவுக்கு பதிலாகத் தமிழக வீரர் நடராஜன் டெஸ்ட் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். இத்தகவலை பிசிசிஐ அறிவித்துள்ளது. 18 பேர் கொண்ட அணியில் நடராஜன் சேர்க்கப்பட்ட நிலையில், 3-வது டெஸ்ட்டில் அவர் விளையாடுவாரா என ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர்.

நடராஜன் தற்போது ஆஸ்திரேலியாவில் இந்திய அணிக்கு வலைப்பயிற்சியில் பந்துவீசி வருகிறார். நடராஜன் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 20 ஓவர் தொடரில் சிறப்பாக விளையாடினார் என்பது குறிப்பிடத்தக்கது.


Advertisement
Advertisement:

Advertisement

Advertisement

Advertisement
[X] Close