[X] Close >

’பாலா’வின் ‘விசித்திரன்’ பட டீசரை வெளியிட்ட சூர்யா!

Visithiran-teaser

இயக்குநர் பாலா தயாரிப்பில் ஆர்.கே சுரேஷ் நடித்துள்ள ’விசித்திரன்’ படத்தின் டீசர் இன்று வெளியாகியுள்ளது.


Advertisement

மலையாளத்தில் கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியான ’ஜோசப்’ படத்தின் தமிழ் ரீமேக்தான் ’விசித்திரன்’. ஜோஜு ஜார்ஜ், பிரபல இயக்குநர் திலீஷ் போத்தன், ஆத்மியா நடிப்பில் வெளியான இப்படத்தை எம். பத்மகுமார் இயக்கியிருந்தார். தன்னிடமிருந்து பிரிந்து சென்ற தனது முன்னாள் மனைவி விபத்தில் இறந்துவிட, அது விபத்தல்ல கொலை என்பதை கண்டுபிடிக்கும் மிரட்டலான ஓய்வு பெற்ற காவல்துறை அதிகாரியாக ஜோஜு ஜார்ஜ் நடிப்பில் மிரட்டியிருப்பார்.

மலையாளத்தில் பாராட்டுகளும் வெற்றியையும் குவித்த இந்தக் க்ரைம் த்ரில்லர் படத்தை இயக்கிய எம்.பத்மகுமாரே தமிழிலும் விசித்திரன் படத்தை இயக்கி இருக்கிறார் என்பது  குறிப்பிடத்தக்கது. ஜோஜு ஜார்ஜ் வேடத்தில் ‘விசித்திரன்’ படத்தில் ஆர்.கே சுரேஷ் நடித்துள்ளார்.


Advertisement

image

இந்நிலையில், இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை கடந்த செப்டம்பர் 23 ஆம் தேதி வெளியிட்டார் நடிகர் சிவகார்த்திகேயேன். இன்று டீசரை நடிகர் சூர்யா வெளியிட்டிருக்கிறார். துருவ் விக்ரம் நடிப்பில் வெளியான வர்மா படத்திற்குப் பிறகு இயக்குநர் பாலா இப்படத்தை தயாரித்திருக்கிறார். 

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement
[X] Close