புத்தாண்டு கொண்டாட்டத்தில் கேக் வெட்டும்போது, வாலிபரை கொல்ல முயற்சி நடந்துள்ளது.
சென்னை ஆதம்பாக்கம் அம்பேத்கர் நகர் 1வது தெருவில் புத்தாண்டு கொண்டாட்டத்தில் வாலிபர்கள் ஈடுபட்டனர். அப்போது கேக் வெட்டும்போது அதேபகுதியை சேர்ந்த விமல் (23) என்ற வாலிபரை சரமாரியாக அரிவாளால் வெட்டி கொலை செய்ய முயற்சித்தனர். விமலை வெட்டியவர்கள் கண்ணிமைக்கும் நேரத்தில் சம்பவ இடத்திலிருந்து தப்பிச் சென்றுவிட்டனர்.
அரிவாளால் வெட்டுப்பட்டு இரத்த வெள்ளத்தில் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த விமலை மீட்ட உறவினர்கள் குரோம்பேட்டையில் உள்ள அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றனர். அங்கு முதலுதவி செய்த மருத்துவர்கள் மேல் சிகிச்சைக்காக சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்ப வைத்தனர்.
தகவல் அறிந்த ஆதம்பாக்கம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர். இந்த விசாரணையில் முன் விரோதம் காரணமாக வெகு நாட்களாக திட்டம் தீட்டியவர் புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது சமயம் பார்த்து எதிர்பாராத நேரத்தில் அரிவாளால் வெட்டி கொலை முயற்சியில் ஈடுபட்டது விசாரணையில் தெரியவந்தது.
புத்தாண்டை அனைவரும் மகிழ்ச்சியுடன் கொண்டாடிய நேரத்தில் ஆதம்பாக்கத்தில் நடைபெற்ற அரிவாள் வெட்டு சம்பவம் அப்பகுதியில் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த ஆதம்பாக்கம் போலீசார் தனிப்படை அமைத்து விமலை வெட்டியவர்களை தேடி வருகின்றனர்.
Loading More post
சென்னையில் தேர்தல் நடத்தை விதிமீறல் தொடர்பாக இதுவரை 24 வழக்குகள் பதிவு
ஐபிஎல் 2021 அட்டவணை வெளியீடு: முதல் போட்டியில் மும்பை-பெங்களூரு அணிகள் மோதல்
பரீட்சையில் திரைப்பட பாடல் எழுதியதால் கிண்டல், வெளியேற்றம்: மாணவர் எடுத்த சோக முடிவு
அதிமுக - பாஜக கூட்டணி தமிழகத்தில் ஆட்சியமைக்கும்: அமித் ஷா நம்பிக்கை
தொகுதிப் பங்கீடு: அதிமுக - தமாகா இன்று 3ஆம் கட்ட பேச்சுவார்த்தை!
“6 தொகுதிக்கு கட்டாயப்படுத்தவில்லை; வேண்டுகோள் வைத்தார்கள்” திருமாவளவன் சிறப்பு பேட்டி
ஓவைசி Vs அப்பாஸ் சித்திக்... மேற்கு வங்கத்தில் பாஜகவுக்கு சாதகமா? - ஒரு பார்வை
ராகுல் காந்திக்கு பலப்பரீட்சை: காங்கிரஸின் 'ஜி-23' தலைவர்களால் சிக்கல் ஏன்?
“அவன் அடிச்சதே ஆண்டர்சன் பால்ல தான்யா..” பொளந்து கட்டிய ‘மான்ஸ்டர்’ ரிஷப் பண்ட்!