நாளை ஜனவரி 1ஆம் தேதி முதல் ஜியோவிலிருந்து பிற நெட்வொர்க்குகளுக்கும் இலவசமாக பேசலாம் என்று ரிலையன்ஸ் நிறுவனம் அறிவித்திருக்கிறது.
இந்தியாவின் மிகப்பெரிய தொலைத் தொடர்பு நெட்வொர்க் நிறுவனமான ரிலையன்ஸ் ஜியோவிலிருந்து இந்தியாவில் உள்ள பிற நெட்வொர்க்குகளுக்கு செய்யும் அனைத்து குரல் அழைப்புகளும் ஜனவரி 1 முதல் இலவசமாக இருக்கும் என்று அறிவித்திருக்கிறது.
தற்போது ஜியோ நிறுவனம் பிற நெட்வொர்க்குகளின் அழைப்புகளுக்கு நிமிடத்திற்கு 6 பைசா கட்டணம் வசூலிக்கிறது. மேலும் ஜியோ ஏற்கனவே தனது ஜியோ விலிருந்து ஜியோவிற்கு செய்யும் அழைப்புகளுக்கு கட்டணம் எதுவும் வசூலிப்பதில்லை.
“ ஜியோ அனைத்து இந்தியர்களையும் VoLTE போன்ற மேம்பட்ட தொழில்நுட்பங்களின் பயனாளியாக மாற்றுவதற்கான உறுதிப்பாட்டில் உறுதியாக உள்ளது. மேலும் நாங்கள் ஒவ்வொரு பயனர் மீதும் அக்கறை செலுத்துகிறோம். இதனால் தற்போது எங்கள் பயனர்கள் அனைவரும் ஜியோவுடன் இலவச குரல் அழைப்புகளை அனுபவிக்கிறார்கள். ஐ.யூ.சி கட்டணங்கள் ரத்து செய்யப்பட்டவுடன், ஆஃப்-நெட் உள்நாட்டு குரல் அழைப்பு கட்டணங்களை பூஜ்ஜியமாக மாற்றுவோம் என்ற உறுதிப்பாட்டை மதித்து, எனவே ஜியோ மீண்டும் 2021 ஜனவரி 1 முதல் அனைத்து ஜியோவிலிருந்து பிற நெட்வொர்க்களுக்கான உள்நாட்டு குரல் அழைப்புகளையும் இலவசமாக வழங்கும். மற்றபடி ஆன்-நெட் உள்நாட்டு குரல் அழைப்புகள் ஜியோ நெட்வொர்க்கில் எப்போதும் இலவசமாக இருக்கும்” என்று ரிலையன்ஸ் ஜியோ தனது அறிக்கையில் கூறியிருக்கிறது.
Loading More post
சொந்த மண்ணில் ஆஸ்திரேலியாவை வெளுத்து வாங்கிய இந்திய அணி - மேட்ச் ரிவ்யூ
சசிகலா ரிலீஸாகும் நாளில் ஜெயலலிதா நினைவிடம் திறப்பு!
’டீம்க்கு கிடைத்த வெற்றி’.. ’தமிழக வீரர்கள் சிறப்பு’ - முதல்வர், ஸ்டாலின் வாழ்த்து!
“பிரைவஸி பாலிசி மாற்றங்களை கைவிடுங்கள்” வாட்ஸ் அப் சி.இ.ஓ-வுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்
ஆஸி. மண்ணில் மூவர்ணக் கொடியுடன் வெற்றி நடைபோட்ட இந்தியா- ஆல்பம்
"டாக்டர் சாந்தா... அடையாறின் மற்றோர் ஆலமரம்!" - நெட்டிசன்களின் ட்வீட்டாஞ்சலி
மருத்துவத் துறைக்கு தன்னலமற்ற சேவை வழங்கிய மருத்துவர் சாந்தா கடந்துவந்த பாதை
"யாருக்கும் விற்க எங்களிடம் எந்த தரவும் இல்லை!" - சிக்னல் சி.இ.ஓ அருணா சிறப்புப் பேட்டி
பைடன், கமலா பதவியேற்புக்காக 'காரிஸன்' நகரமாகும் வாஷிங்டன் டி.சி... அதென்ன 'காரிஸன்'?