[X] Close >

குற்றாலம் பேரருவியில் தண்ணீர் ஆர்ப்பரிப்பு... சுற்றுலாப்பயணிகள் குளிக்கத்தடை

Courtallam-Main-Falls-is-currently-flooded

குற்றாலம் பேரருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி வருவதால் சுற்றுலாப்பயணிகள் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. 


Advertisement

தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் நேற்றிரவு முதல் சாரல் மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக அருவிகளில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. பேரருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்துக் கொட்டுவதால் அங்கு மட்டும் சுற்றுலாப் பயணிகள் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

ஐந்தருவி, பழைய குற்றால அருவி ஆகிய அருவிகளில் தண்ணீர் மிதமாக விழுவதால் அங்கு குளிப்பதற்கு தடை விதிக்கப்படவில்லை. பனியையும் பொருட்படுத்தாமல் சுற்றுலாப் பயணிகள் குளித்து மகிழ்ந்து வருகின்றனர். தொடர்ந்து குற்றாலத்தில் சாரல் மழையும் தென்றல் காற்றுமாக ரம்மியமான சூழல் நிலவுவதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.


Advertisement

நாளை புத்தாண்டு விடுமுறையொட்டி ஏராளமான சுற்றுலாப்பயணிகள் வருவார்கள் என எதிர்பார்க்கபடுவதால் அதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை போலீசார், பேரூராட்சி ஊழியர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.  கொரோனா பரவல் காரணமாக அருவியில் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை மட்டுமே குளிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

 

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement
[X] Close