வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்வதற்கான அவகாசம் ஜனவரி 10-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
தனி நபர்கள் வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்வதற்கான அவகாசம் இன்றுடன் முடிவடையவிருந்த நிலையில் அது வரும் ஜனவரி 10-ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது. தொழில் மற்றும் வணிக நிறுவனங்கள் வரிக்கணக்கு தாக்கல் செய்வதற்கான அவகாசம் பிப்ரவரி 15-ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வழக்கமாக வருமான வரிக்கணக்கு தாக்கல் அவகாசம் ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 31ஆம் தேதியுடன் முடிவடைந்து விடும். ஆனால் கொரோனா பாதிப்புகளை கருத்தில் கொண்டு டிசம்பர் 31 வரை கூடுதல் அவகாசம் அளிக்கப்பட்ட நிலையில் அது தற்போது மேலும் நீட்டிக்கப்பட்டுள்ளது. ஜிஎஸ்டி வரிக்கணக்கு தாக்கல் செய்வதற்கான அவகாசமும் பிப்ரவரி 28-ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது
Loading More post
’டீம்க்கு கிடைத்த வெற்றி’.. ’தமிழக வீரர்கள் சிறப்பு’ - முதல்வர், ஸ்டாலின் வாழ்த்து!
“பிரைவஸி பாலிசி மாற்றங்களை கைவிடுங்கள்” வாட்ஸ் அப் சி.இ.ஓ-வுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்
ஆஸி. மண்ணில் மூவர்ணக் கொடியுடன் வெற்றி நடைபோட்ட இந்தியா- ஆல்பம்
அன்றே கணித்த சுனில் கவாஸ்கர்: 32 ஆண்டுகால ஆஸி.,யின் சரித்திரத்தை தகர்த்த இந்தியா
வாஷிங்டன் சுந்தர், பன்ட் விளாசல்! - டெஸ்ட் தொடரை வென்றது இந்தியா
"டாக்டர் சாந்தா... அடையாறின் மற்றோர் ஆலமரம்!" - நெட்டிசன்களின் ட்வீட்டாஞ்சலி
மருத்துவத் துறைக்கு தன்னலமற்ற சேவை வழங்கிய மருத்துவர் சாந்தா கடந்துவந்த பாதை
"யாருக்கும் விற்க எங்களிடம் எந்த தரவும் இல்லை!" - சிக்னல் சி.இ.ஓ அருணா சிறப்புப் பேட்டி
பைடன், கமலா பதவியேற்புக்காக 'காரிஸன்' நகரமாகும் வாஷிங்டன் டி.சி... அதென்ன 'காரிஸன்'?