மாஸ்டர் படத்தின் புதியப் போஸ்டர்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
கொரோனா பெருந்தொற்றினால் திரை அரங்குகள் தமிழகத்தில் கடந்த மார்ச் மாதத்தில் மூடப்பட்டன. அதன் காரணமாக கடந்த ஏப்ரல் மாதம் ரிலீசாக வேண்டிய மாஸ்டர் திரைப்படத்தின் வெளியீடு தள்ளிப்போனது. சூர்யாவின் சூரரைப் போற்று ஓடிடியில் வெளியான நிலையில், மாஸ்டர் படமும் ஓடிடியில் வெளியாகுமா எனற கேள்வி எழுந்தது.
ஆனால் தயாரிப்பு நிறுவனமோ மாஸ்டர் படத்தை திரையரங்கிலே வெளியிட விருப்பம் தெரிவித்தது. இந்நிலையில் ஜனவரி 13 ஆம் தேதி மாஸ்டர் படம் வெளியாகும் என தயாரிப்பு நிறுவனம் அதிகாரப் பூர்வமாக அறிவித்துள்ளது.
இதனையடுத்து விஜய் ரசிகர்கள் உற்சாகத்தை சமூக வலைதளங்களில் வெளிப்படுத்தி வந்த நிலையில், தற்போது மாஸ்டர் படத்திலிருந்து புதியப்போஸ்டர்களை தயாரிப்பு நிறுவனம் அதனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. இந்தப் புகைப்படங்கள் தற்போது அவரது ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்று வருகிறது.
2020, signing off with exclusive posters of #Master ? pic.twitter.com/VP7e3Jst8r — XB Film Creators (@XBFilmCreators) December 30, 2020
Loading More post
"இரண்டும் பாதுகாப்பானவை; வதந்திகளை நம்பாதீர்! - கொரோனா தடுப்பூசி பணியை தொடங்கிவைத்த மோடி
'ஜல்லிக்கட்டு நாயகன்' ஓபிஎஸ்! - அலங்காநல்லூரில் முதல்வர் இபிஎஸ் புகழாரம்
அனல் பறக்கும் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு: விளம்பர இடைவேளையின்றி சிறப்பு நேரலை!
தமிழகத்தில் இன்று 160 இடங்களில் கோவிஷீல்டு, 6 பகுதிகளில் கோவாக்சின் செலுத்த ஏற்பாடு!
காணும் பொங்கல் கொண்டாட கட்டுப்பாடுகள்: கடற்கரைகளில் காவல் துறை கண்காணிப்பு தீவிரம்!
ஈஸ்வரன்... போதுமான பொழுதுபோக்கு அனுபவம் தந்ததா? - திரைப்பார்வை
திமிறும் காளைகளை திமில் தழுவி அடக்கும் காளையர் - அவனியாபுரம் ஜல்லிக்கட்டு வீடியோ தொகுப்பு
'ஜல்லிக்கட்டு' ஆன 'சல்லிக்கட்டு'... தொன்மையும் வரலாறும் - ஒரு பார்வை
அனல் பறக்கும் அவனியாபுரம் ஜல்லிக்கட்டு... சீறும் காளைகள், அடக்க பாயும் வீரர்கள்! - ஆல்பம்