[X] Close >

”பொங்கலுக்கு மாஸ்டருடன் மோதும் ஈஸ்வரன்” - உறுதி செய்த சிம்பு!

Eeswaran-for-Pongal

சிம்புவின் ’ஈஸ்வரன்’ படம் விஜய்யின் மாஸ்டர் படத்துடன் பொங்கலுக்கு மோதவிருக்கிறது. இதுகுறித்த அறிவிப்பை சிலம்பரசன் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார்.


Advertisement

image

கடந்த ஆண்டு வெளியான ‘வந்தா ராஜாவா தான் வருவேன்’ படத்திற்குப்பிறகு சிம்பு நடித்து முடித்துள்ள படம் ஈஸ்வரன். சுசீந்திரன் இயக்கியுள்ள இப்படத்தில் சிம்பு 101 கிலோவிலிருந்து 71 கிலோவாக குறைத்துள்ளார். சமீபத்தில் திண்டுக்கல்லில் நடைபெற்று வந்த, இப்படத்தின் படப்பிடிப்பு, பாடல்கள், டப்பிங் என அனைத்து பணிகளும் நிறைவடைந்ததையொட்டி, அப்படத்தில் பணியாற்றிய 400 பேருக்கு ஒரு கிராம் தங்க நாணயம் பரிசளித்தார் சிம்பு.


Advertisement

image

இந்நிலையில், பொங்கலுக்கு வெளியாகும் என்று எதிர்பார்த்துக்கொண்டிருந்த ஈஸ்வரன் படம் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் விதமாக பொங்கலுக்கு வரும் ஜனவரி 14 ஆம் தேதி வெளியாகும் என்று சிம்பு தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். சிம்புவுக்கு ஜோடியாக நிதி அகர்வால் நடிக்கிறார். ஏற்கனவே, மாஸ்டர் திரைப்படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 13 ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதனால், விஜயின் மாஸ்டர் உடன் சிலம்பரசனின் ஈஸ்வரன் நேரடியாக மோதுகிறது.

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement
[X] Close