[X] Close >

“ராஜினிமா முடிவை திரும்ப பெறுகிறேன்” - ஒரே நாளில் பல்டி அடித்த குஜராத் பாஜக எம்பி!

BJP-MP-Mansukh-bhai-Vasava-from-Gujarat-withdraw-his-resignation-within-a-day

அரசியலில் எதுவுமே நிரந்தரம் இல்லை என சொல்வது உண்டு. அதாவது பகைவரும் நண்பர்களாவர்கள். நண்பர்களும் பகைவர்களாவார்கள். இது தான் அரசியல் கணக்கு. அந்த வகையில் கடந்த 24 மணி நேரத்திற்கு (29/12/2020) முன்னதாக கட்சியிலிருந்து விலகுவதாக சொல்லி ராஜினாமா செய்த பாஜக மக்களவை உறுப்பினர் அந்த முடிவை திரும்ப பெற்றுக்கொள்வதாக தெரிவித்துள்ளார்.


Advertisement

image

யார் அவர்?


Advertisement

குஜராத் மாநிலம் நர்மதா மாவட்டத்தின் 121 கிராமங்களை உள்ளடக்கிய, ஷூல்பனேஷ்வர் வனவிலங்கு சரணாலயத்தைச் சுற்றியுள்ள பகுதிகளை ‘சுற்றுச்சூழல் உணர்திறன் மண்டலம்’ என்று அறிவிக்கும் MoEFCC-இன் அறிவிப்பைத் திரும்பப் பெறுமாறு பழங்குடி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதுதொடர்பாக விவசாயிகள் மற்றும் உள்ளூர் மக்களின் நலன்கருதி கடந்த வாரம் Bharuch மக்களவை தொகுதி எம்பி மன்சுக் வாசவா பிரதமருக்கு கடிதம் ஒன்றை எழுதியிருந்தார். மன்சுக் வாசவா “பட்ஜெட் அமர்வு கூட்டத்தின்போது சபாநாயகரை நேரில் சந்தித்து ராஜினாமா கடிதத்தைக் கொடுத்துவிடுகிறேன்” என சொல்லி கட்சியிலிருந்து தான் விலக உள்ள முடிவை அறிவித்தார்.

இந்நிலையில், இன்று அவரது ராஜினாமா முடிவிலிருந்து யூ டெரன் எடுத்துள்ளார் அவர். “எனக்கு அரசுடனும், கட்சியுடனும் எந்த சிக்கலும் இல்லை. எனது உடல் நிலையினாலேயே நான் விலக நினைத்தேன். இருப்பினும் நான் மக்களவை உறுப்பினராக தொடர வேண்டும் என கட்சியினர் அன்போடு சொன்னதால் எனது ராஜினாமா முடிவை பின்வாங்கி கொள்கிறேன்” என தெரிவித்துள்ளார்.

image


Advertisement

அவரது திடீர் மனமாற்றத்திற்கு பின்னால் கட்சியின் அழுத்தம் இருக்கலாம் எனவும் சொல்லப்படுகிறது. மத்திய குஜராத்தில் உள்ள இந்த Bharuch மக்களவை தொகுதியில் அவர் ஆறுமுறை உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement
[X] Close