சென்னை ஆவடி அருகே மின்சாரம் தாக்கி கணவர், மனைவி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை ஆவடியை அடுத்த அயப்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் விஜயக்குமார். இவரது மனைவி சசிகலா. விஜயக்குமார், அம்பத்தூர் தொழிற்பேட்டையில் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். இந்த நிலையில் விழுப்புரத்தில் தனது உறவினரின் துக்க நிகழ்வுக்கு செல்வதற்காக விஜயக்குமார் தயாராகிக்கொண்டிருந்தார். அப்போது குளிப்பதற்காக விஜயக்குமாரின் மனைவி சசிகலா வாட்டர் ஹீட்டரை வைத்து சுடு தண்ணீர் வைக்க முயன்றுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக மின்சாரம் தாக்கி சசிகலா தூக்கி வீசப்பட்டார்.
இதைப்பார்த்த விஜயக்குமார் சசிகலாவை காப்பற்ற முயன்றுள்ளார். அப்போது மின்சாரம் விஜயக்குமாரையும் தாக்கியது. இதையடுத்து இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இதுகுறித்து தகவலறிந்து வந்த போலீசார் இறந்தவர்களின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இறந்த தம்பதிக்கு 10 வயதில் மகளும், 7 வயதில் மகனும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Loading More post
அறுவைசிகிச்சைக்காக சில நாட்கள் ஓய்வு: கமல் அறிவிப்பு
"தென்மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழைக்கு வாய்ப்பு” -சென்னை வானிலை ஆய்வு மையம்
செங்கல்பட்டு டோல்கேட்: கூட்ட நெரிசலால் வாகன ஓட்டிகள் அவதி
திமுகவில் இணைந்த ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள்
பாலக்கோட் தாக்குதல் பற்றி முன்பே அறிந்திருந்த அர்னாப்? கசிந்த வாட்ஸ்அப் உரையாடல்
கொரோனா தடுப்பூசியை யார் போடலாம்; யார் போடக்கூடாது? கோவாக்சின் பற்றிய முழுத் தகவல்
திடீர் மழையால் 'கருப்பான' பொங்கல்: நீரில் மூழ்கிய பயிர்கள்... வேதனையில் விவசாயிகள்!
பரிசோதனை முழுமைபெறாத கோவாக்சின் தடுப்பூசியை இந்திய அரசு வாங்குவது ஏன்? எழும்பும் கேள்விகள்
ஈஸ்வரன்... போதுமான பொழுதுபோக்கு அனுபவம் தந்ததா? - திரைப்பார்வை
சப்ஜெக்டில் மட்டும் சமூக அக்கறை போதுமா? - 'பூமி' என்னும் சினிமா எழுப்பும் கேள்விகள்!