மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்து நாடு முழுவதுமுள்ள விவசாயிகள் தலைநகர் டெல்லியில் காலவரையற்ற அறப்போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். சட்டத்தை திரும்ப பெறுமாறு அரசை வலியுறுத்தியும் வருகின்றனர். இந்தச் சட்டங்கள் மூலம் அம்பானி, அதானி போன்ற பெரும் தொழிலதிபா்கள் வேளாண் துறையை கைப்பற்றுவதற்கு வழி வகுக்கப்பட்டுள்ளது என்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
இதனால், பெருநிறுவனங்களுக்கு சொந்தமான சொத்துகள், பஞ்சாபில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளால் தாக்குதலுக்கு இலக்காகி வருகின்றன. முக்கியமாக ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் தொலைத்தொடா்பு கோபுரங்கள் அதிக அளவில் சேதப்படுத்தப்படுகின்றன. இதுவரை 1,561 செல்போன் கோபுரங்கள் சேதப்படுத்தப்பட்டு இருக்கின்றன. இதுபோன்ற தாக்குதல்களில் ஈடுபடக் கூடாது என பஞ்சாப் முதல்வா் அமரீந்தா் சிங் எச்சரிக்கை விடுத்துள்ளார். இருப்பினும் இது தொடர்கதையாகி உள்ளது.
இந்நிலையில் இந்த விவகாரத்தில் பஞ்சாப் மாநில அரசின் உதவியை வேண்டியுள்ளது ஜியோ நிறுவனம். அதற்காக அந்த மாநில முதல்வர் மற்றும் போலீஸ் டிஜிபி இடம் ஜியோ முறையிட்டுள்ளது.
Reliance Jio Infocomm has written to Punjab CM and Punjab DGP seeking their intervention into "incidents of sabotage and vandalism at Jio Network sites" in Punjab by unknown persons — ANI (@ANI) December 30, 2020
“ஜியோ நிறுவனத்திற்கு சொந்தமான செல்போன் டவர்கள் தொடர்ந்து தாக்கப்பட்டு வருகின்றன. இந்த நாசவேலை செய்யும் அடையாளம் தெரியாத நபர்கள் மீது அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்” என அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. அரசு இதில் துரிதமான நடவடிக்கை எடுத்தால் மட்டுமே பல கோடி ரூபாய் நஷ்டத்தை தவிர்க்க முடியும் என ஜியோ வட்டாரத்தில் சொல்லப்படுகிறது.
முன்னதாக, பிரதமர் மோடியும், “ஜனநாயக உரிமையை பயன்படுத்தி போராட்டத்தில் ஈடுபடலாமே தவிர பொதுமக்களின் சொத்துக்களுக்கு சேதம் விளைவிக்கக் கூடாது” என்று கூறியிருந்தார்.
நன்றி : ANI
Loading More post
சொந்த மண்ணில் ஆஸ்திரேலியாவை வெளுத்து வாங்கிய இந்திய அணி - மேட்ச் ரிவ்யூ
சசிகலா ரிலீஸாகும் நாளில் ஜெயலலிதா நினைவிடம் திறப்பு!
’டீம்க்கு கிடைத்த வெற்றி’.. ’தமிழக வீரர்கள் சிறப்பு’ - முதல்வர், ஸ்டாலின் வாழ்த்து!
“பிரைவஸி பாலிசி மாற்றங்களை கைவிடுங்கள்” வாட்ஸ் அப் சி.இ.ஓ-வுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்
ஆஸி. மண்ணில் மூவர்ணக் கொடியுடன் வெற்றி நடைபோட்ட இந்தியா- ஆல்பம்
"டாக்டர் சாந்தா... அடையாறின் மற்றோர் ஆலமரம்!" - நெட்டிசன்களின் ட்வீட்டாஞ்சலி
மருத்துவத் துறைக்கு தன்னலமற்ற சேவை வழங்கிய மருத்துவர் சாந்தா கடந்துவந்த பாதை
"யாருக்கும் விற்க எங்களிடம் எந்த தரவும் இல்லை!" - சிக்னல் சி.இ.ஓ அருணா சிறப்புப் பேட்டி
பைடன், கமலா பதவியேற்புக்காக 'காரிஸன்' நகரமாகும் வாஷிங்டன் டி.சி... அதென்ன 'காரிஸன்'?