ஆக்ஸ்போர்டு - அஸ்ட்ரா ஜெனெகாவின் கொரோனா தடுப்பூசிக்கு பிரிட்டன் அரசு ஒப்புதல் அளித்துள்ளது. ஃபைசர் - பயோஎன்டெக் தடுப்பூசிக்குப் பிறகு இங்கிலாந்தில் பொதுமக்களுக்கு வழங்கப்படும் இரண்டாவது தடுப்பூசி இதுவாகும்.
கொரோனா நோய்த்தொற்றுக்கு தடுப்பூசி கண்டறியும் பணியில் உலக நாடுகள் தீவிரம் காட்டி வரும் நிலையில், இங்கிலாந்து, அமெரிக்கா போன்ற நாடுகள் மக்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணியை துவங்கிவிட்டன. இந்த இரு நாடுகளும் ஃபைசர் நிறுவனம் உருவாக்கிய கொரோனா தடுப்பூசிக்கு ஒப்புதல் அளித்து செயல்படுத்தியுள்ளன.
இந்நிலையில், ஐரோப்பிய நாடான பிரிட்டனில் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகமும் 'அஸ்ட்ரா ஜெனெகா' நிறுவனம், தங்களது கொரோனா தடுப்பூசிக்கு ஒப்புதல் கோரி விண்ணப்பித்தன. இப்போது, பிரிட்டன் அரசு இந்த தடுப்பூசிக்கு ஒப்புதல் அளித்துள்ளது.
இது தொடர்பாக அஸ்ட்ரா ஜெனெகா நிறுவனம் தரப்பில் கூறுகையில், '4 மற்றும் 12 வாரங்கள் இடைவெளிக்குள் 2 டோஸ் மருந்துகள் செலுத்த வேண்டும். இந்தத் தடுப்பூசி, கொரோனா அறிகுறைகளை தடுப்பதில் பாதுகாப்பான மற்றும் பயனுள்ளதாக இருக்கும் என மருத்துவ பரிசோதனைகளில் தெரியவந்துள்ளது. இரண்டாவது டோஸ் செலுத்தப்பட்டு 14 நாட்களுக்கு பிறகு யாருக்கும் பாதிப்பில்லை' என கூறப்பட்டுள்ளது.
இந்தியாவில் ஆக்ஸ்போர்ட் பல்கலை மற்றும் 'அஸ்ட்ரா ஜெனெகா' நிறுவனம், மஹாராஷ்டிரா மாநிலம் புனேவைச் சேர்ந்த, 'சீரம்' நிறுவனத்துடன் இணைந்து 'கோவிஷீல்டு' என்னும் தடுப்பூசியை தயாரித்து வருகிறது.
இந்தியாவிலும் இந்நிறுவனம் ஒப்புதலுக்காக விண்ணப்பித்துள்ளது குறிப்பிடத்தக்கது. பிரிட்டனில் ஒப்புதல் அளிக்கப்பட்ட நிலையில், இந்தியாவிலும் இந்த தடுப்பூசிக்கு ஒப்புதல் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Loading More post
ஐயூஎம்எல் 3, மமக 2 - திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு கையெழுத்து!
அதிமுக-பாஜக தொகுதி பங்கீடு பற்றிய முழுத் தகவல் 2 நாட்களில் தெரியவரும் - எல்.முருகன்
திமுக - ஐயூஎம்எல், மமக கட்சிகள் இடையே கையெழுத்தானது தொகுதி பங்கீடு ஒப்பந்தம்
துணை முதல்வர் ஓபிஎஸ்-ஐ சந்திக்க நேரம் கேட்ட தேமுதிக!
கன்னியாகுமரியில் ராகுலின் படகு சவாரிக்கு தேர்தல் ஆணையம் கட்டுப்பாடு!
அதிமுகவுடன் அதிருப்தி... தேமுதிகவிடம் எஞ்சியிருக்கும் 'வாய்ப்புகள்' என்னென்ன? - ஒரு பார்வை
அதிகரிக்கும் சிலிண்டர் விலை.. சின்ன சின்ன கவனம் போதும்.. கேஸ் மிச்சப்படுத்தும் 11 வழிகள்!
வன்னியர்களுக்கு 10.5% சதவீத இடஒதுக்கீடு : சாத்தியமா, சட்டச்சிக்கல் உள்ளதா? - விரிவான அலசல்
வாழ்வா, சாவா போராட்டத்தில் கம்யூனிஸ்ட், காங்கிரஸ்... எப்படி இருக்கிறது கேரள தேர்தல் களம்?