இந்திய கிரிக்கெட் அணியின் இளம் வீரர் சுப்மன் கில், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் அறிமுகம் வீரராக களம் கண்டு அற்புதமாக விளையாடினார். அவரது ஆட்டம் அந்த வீரரை போல உள்ளது என ரசிகர்களும், கிரிக்கெட் விமர்சகர்களும் தெரிவித்திருந்தனர். இந்நிலையில் 'அவருக்கு நிகர் அவரே. அவரை யாருடனும் ஒப்பிட வேண்டாம்' என கில்லுக்கு ஆதரவாக தனது கருத்தை தெரிவித்துள்ளார் இந்திய அணியின் முன்னாள் தொடக்க வீரர் வாசிம் ஜாபர்.
“கில் தனிச்சிறப்பு மிக்க வீரர் தான். அவரது ஆட்டத்தை அனுபவித்து விளையாட விடுங்கள். அவரை யாருடனும் ஒப்பிட்டு பேச வேண்டாம். அது அவருக்கு அழுத்தத்தை கொடுக்கலாம். அவர் அடுத்த முன்னாள் வீரர் இல்லை. அவர் முதல் கில். அவ்வளவு தான். அதுமட்டும் தான். வழக்கத்திற்கு மாறான எதிர்பார்ப்பினால் திறம்படைத்த வீரர்களை நாம் இழந்துள்ளோம்” என ட்விட்டரில் அவர் தெரிவித்துள்ளார்.
Shubman is special but please let him enjoy his cricket and grow into his career. Don't compare him to anyone and put undue pressure on him. He's not next somebody he's first Shubman Gill. We've lost many great talents due to undue pressure and unreal expectations. #Shubmangill — Wasim Jaffer (@WasimJaffer14) December 29, 2020
கில் பிருத்வி ஷாவுக்கு மாற்றாக களம் இறங்கி அசத்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Loading More post
கீழடி அகழாய்வில் முதுமக்கள் தாழியுடன் மனித எலும்புக்கூடுகள் கண்டெடுப்பு!
ஸ்டெர்லைட் ஆலையை திறந்தால்..? - உச்ச நீதிமன்ற யோசனையும், தமிழக அரசின் வாதங்களும்
ஆக்ஸிஜன் ஆலைகளை ராணுவத்திடம் ஒப்படைக்க வேண்டும்- அர்விந்த் கெஜ்ரிவால்
ஆக்ஸிஜன் உற்பத்திக்காக ஸ்டெர்லைட்டை திறக்க தமிழக அரசு மீண்டும் எதிர்ப்பு
"20 லட்சம் தடுப்பூசிகள் தமிழகத்திற்கு உடனே தேவை" - பிரமருக்கு முதல்வர் பழனிசாமி கடிதம்
கோவிஷீல்டு விலை உயர்வு: கொரோனா தடுப்பூசி சந்தையில் பொதுமக்களுக்கு சுமையா? - ஒரு பார்வை
மும்முறை உருமாறிய 'பெங்கால் கொரோனா'வின் தீவிரத்தன்மை எத்தகையது? - ஒரு பார்வை
காரை விற்று மக்களுக்கு உதவி... மும்பையின் 'ஆக்சிஜன் மேன்' ஷாஹனாவாஸ்!
’cowin’... 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் தடுப்பூசி செலுத்திக்கொள்ள பதிவுசெய்யும் முறை