விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனையில், 14 வயது சிறுமிக்கு ஆண் குழந்தை பிறந்ததை அடுத்து, அச்சிறுமியின் கர்ப்பத்திற்கு காரணமான இளைஞர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.
அருப்புக்கோட்டை அருகே மடத்துபட்டியை சேர்ந்த 14 வயது சிறுமி ரதி (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இச்சிறுமி அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனையில் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டார். பிரசவத்திற்கு வந்திருப்பவர் சிறுமியாக இருப்பதால் சந்தேகமடைந்த மருத்துவர்கள் அந்த சிறுமியிடம் வயதை கேட்டுள்ளனர். அந்த சிறுமி வயது 14 என்று கூறியுள்ளார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த மருத்துவமனை நிர்வாகம், சிறுமியின் கர்ப்பம் பற்றி அருப்புக்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் அடிப்படையில் மகளிர் போலீசார் சிறுமியிடமும் அவரது உறவினர்களிடமும் விசாரணை மேற்கொண்டதில் சிறுமிக்கும் அவரது உறவினரான சின்னராசு என்பவருக்கும் ஏற்பட்ட பழக்கத்தின் காரணமாக அவரது உறவினர்களே இருவருக்கும் திருமணம் முடித்து வைத்துள்ளன. சிறுமி தற்போது பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டபோதுதான் சிறுமிக்கு குழந்தை திருமணம் நடைபெற்றது தெரியவந்தது.
இதனையடுத்து சிறுமியை கர்ப்பமாக்கியதாக சின்னராசுவை மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Loading More post
நீதிபதிகள் நியமனம் குறித்த பேச்சு: ஆர்.எஸ்.பாரதிக்கு எதிராக வழக்குத் தொடர அனுமதி
அதானி துறைமுக விரிவாக்கத்தை எதிர்த்து மாபெரும் இணையவழி பதாகைப் போராட்டம்: சீமான் அழைப்பு
"பத்ம விருதுகளை திருப்பியளிக்கவில்லை!" - இளையராஜா விளக்கம்
வசூல் வேட்டை நடத்தும் ‘மாஸ்டர்’ ; 5 நாளில் இத்தனை கோடிகளா!
'சென்னைக்கு வெள்ள அபாயம்!' - காட்டுப்பள்ளி அதானி துறைமுக விரிவாக்கத்திற்கு எதிர்ப்பு ஏன்?
"யாருக்கும் விற்க எங்களிடம் எந்த தரவும் இல்லை!" - சிக்னல் சி.இ.ஓ அருணா சிறப்புப் பேட்டி
பைடன், கமலா பதவியேற்புக்காக 'காரிஸன்' நகரமாகும் வாஷிங்டன் டி.சி... அதென்ன 'காரிஸன்'?
'மீன் வகைகளில் கவனம் முக்கியம்!' - கர்ப்பிணிகளின் தினசரி டயட்டில் இருக்கவேண்டிய உணவுகள்
'சென்னைக்கு வெள்ள அபாயம்!' - காட்டுப்பள்ளி அதானி துறைமுக விரிவாக்கத்திற்கு எதிர்ப்பு ஏன்?