ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் சிறுமியிடம் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்ட வடமாநில இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து மாவட்ட மகளிர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
ஈரோடு மாவட்டம் பெருந்துறை அடுத்த பணிக்கம்பாளையம் பகுதியில் மேற்கு வங்க மாநிலத்தை சேர்ந்த பெண் ஒருவர் தனது குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். அதே பகுதியில் தனியார் ஆலையில் வேலை செய்யும் மேற்கு வங்க மாநிலத்தை சேர்ந்த ரபூல் மொண்டால் என்ற இளைஞரும் வசித்து வந்தார்.
இந்நிலையில் ரபூல் மொண்டால் அப்பெண்ணின் மகளான 8 வயதான சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கடந்த ஆண்டு ஈரோடு அனைத்து மகளிர் காவல்நிலயத்தில் அளிக்கப்பட்டது. புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் ரபூல் மொண்டாலை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.
இந்நிலையில் இன்று இவ்வழக்கினை விசாரித்த மாவட்ட மகளிர் நீதிமன்ற நீதிபதி மாலதி, ரபூல் மொண்டாலிற்கு 20 ஆண்டுகள் சிறை தண்டணையும் 5 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு தமிழக அரசு சார்பில் 3 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் பரிந்துரை செய்தார்.
Loading More post
நான் வழிகாட்டியாக உள்ள ‘மக்கள் பாதை’ அமைப்பு அரசியலில் பங்கேற்கக்கூடும்: சகாயம்
நார்வே அதிர்ச்சி: பைசர் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்ட 23 முதியவர்கள் மரணம்
ரஷ்யாவிடம் எஸ்-400 ஏவுகணைகளை வாங்கும் இந்தியாவுக்கு அமெரிக்கா எச்சரிக்கை!
தடுப்பூசி நம்பகமானதாக இருந்தால், ஏன் ஆட்சி செய்பவர்கள் போடவில்லை?! - காங்கிரஸ்
உ.பி: அறுவை சிகிச்சை வார்டில் ஹாயாக படுத்துக்கிடந்த தெருநாய்.. வைரல் வீடியோ
திடீர் மழையால் 'கருப்பான' பொங்கல்: நீரில் மூழ்கிய பயிர்கள்... வேதனையில் விவசாயிகள்!
பரிசோதனை முழுமைபெறாத கோவாக்சின் தடுப்பூசியை இந்திய அரசு வாங்குவது ஏன்? எழும்பும் கேள்விகள்
ஈஸ்வரன்... போதுமான பொழுதுபோக்கு அனுபவம் தந்ததா? - திரைப்பார்வை
சப்ஜெக்டில் மட்டும் சமூக அக்கறை போதுமா? - 'பூமி' என்னும் சினிமா எழுப்பும் கேள்விகள்!
"நாங்கள் அன்று அழுதோம், சிரித்தோம்..." - அஸ்வின் மனைவியின் உணர்வுபூர்வ பகிர்வு