டெல்லியில் நடைபெற்றுவரும் விவசாயிகள் போராட்டத்துக்கு ஆதரவாக அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக்குழு சார்பில் தஞ்சையில் பொதுக்கூட்டம் நடைபெற்றது, இந்த பொதுக்கூட்டத்தில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்துகொண்டனர்.
மத்திய அரசின் மூன்று வேளாண் சட்டங்கள் மற்றும் மின்சார சட்டத்திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக்குழு சார்பாக தஞ்சையில் பேரணி மற்றும் பொதுக்கூட்டம் நடைபெற்றுவருகிறது. இந்த பொதுக்கூட்டத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், அகில இந்திய விவசாயிகள் மற்றும் விவசாய தொழிலாளர் சங்கம், தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், தமிழர் தேசிய முன்னணி, கரும்பு உற்பத்தியாளர் கூட்டமைப்பு, மக்கள் அதிகாரம், ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டக்குழு உள்ளிட்ட 15க்கும் மேற்பட்ட விவசாய சங்கங்கள் மற்றும் அமைப்புகள் கலந்துகொண்டுள்ளன. தமிழகம் முழுவதிலுமுள்ள பல்வேறு அமைப்புகளை சேர்ந்த 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விவசாயிகள் இந்த பேரணி மற்றும் பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டுள்ளனர்.
இந்த பொதுக்கூட்டத்தில் பல்வேறு அமைப்புகளின் தலைவர்களும் உரையாற்றிவருகின்றனர், இந்த பேரணிக்கு ஆதரவாக தஞ்சை எம்.பி பழனிமாணிக்கல், நாகப்பட்டினம் எம்.பி செல்வராஜ் ஆகியோர் கலந்துகொண்டுள்ளனர். பொதுக்கூட்டத்தின் முடிவில் பொதுக்கூட்ட தீர்மானம் நிறைவேற்றப்படவுள்ளது.
Loading More post
"இரண்டும் பாதுகாப்பானவை; வதந்திகளை நம்பாதீர்! - கொரோனா தடுப்பூசி பணியை தொடங்கிவைத்த மோடி
'ஜல்லிக்கட்டு நாயகன்' ஓபிஎஸ்! - அலங்காநல்லூரில் முதல்வர் இபிஎஸ் புகழாரம்
அனல் பறக்கும் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு: விளம்பர இடைவேளையின்றி சிறப்பு நேரலை!
தமிழகத்தில் இன்று 160 இடங்களில் கோவிஷீல்டு, 6 பகுதிகளில் கோவாக்சின் செலுத்த ஏற்பாடு!
காணும் பொங்கல் கொண்டாட கட்டுப்பாடுகள்: கடற்கரைகளில் காவல் துறை கண்காணிப்பு தீவிரம்!
பரிசோதனை முழுமைபெறாத கோவாக்சின் தடுப்பூசியை இந்திய அரசு வாங்குவது ஏன்? எழும்பும் கேள்விகள்
ஈஸ்வரன்... போதுமான பொழுதுபோக்கு அனுபவம் தந்ததா? - திரைப்பார்வை
சப்ஜெக்டில் மட்டும் சமூக அக்கறை போதுமா? - 'பூமி' என்னும் சினிமா எழுப்பும் கேள்விகள்!
"நாங்கள் அன்று அழுதோம், சிரித்தோம்..." - அஸ்வின் மனைவியின் உணர்வுபூர்வ பகிர்வு