சட்டமன்ற தேர்தலின்போது விவசாயியிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட ரூ.6.78 லட்சத்தை 4 வாரங்களில் திருப்பிக் கொடுக்க வருவாய் துறை அதிகாரிகளுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2016 சட்டமன்ற தேர்தலின்போது, விழுப்புரம் மாவட்டம், வானூர் தாலுகா, ஆண்டியார்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி கண்ண பிள்ளை என்பவரது தோட்டத்தில், வாக்காளர்களுக்கு லஞ்சமாக கொடுக்க வைத்திருந்ததாகக்கூறி 6 லட்சத்து 78 ஆயிரத்து 10 ரூபாயை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக வழக்கும் பதிவு செய்யப்பட்டது.
அது சவுக்கு மரங்கள் விற்றதன்மூலம் கிடைத்த பணம் எனவும், அதை திருப்பித்தரக் கோரியும் கண்ண பிள்ளை தாக்கல் செய்த மனுவை வானூர் முன்சீப் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. தனது பணத்தை திருப்பித்தரக் கோரி அளித்த மனுவை பரிசீலிக்கவில்லை என்பதால் ஆண்டுக்கு 12 சதவீத வட்டியுடன் பணத்தை திருப்பித்தரக் கோரி கண்ணபிள்ளை சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி புஷ்பா சத்தியநாராயணா, வாக்காளர்களுக்கு லஞ்சம் கொடுக்க வைத்திருந்ததாக கூறப்பட்ட குற்றச்சாட்டு நிரூபிக்கப்படாத பட்சத்தில், விவசாயி கடின உழைப்பால் சம்பாதித்த பணத்தை வழங்க மறுக்கமுடியாது எனக் கூறி, நான்கு வாரங்களில் பணத்தை வழங்கவேண்டும் என உத்தரவிட்டார்.
மேலும், பணத்தை திருப்பிக் கேட்டு அளித்த விண்ணப்பத்தின்மீது முடிவெடுக்காமல் தங்கள் கடமையை தவறக்கூடாது என வருவாய் துறை அதிகாரிகளுக்கு நீதிபதி கண்டனமும் தெரிவித்தார்.
Loading More post
90களின் பிற்பகுதியிலிருந்து கர்ணன்.. அதிருப்தி குரல்களுக்கு முற்றுப்புள்ளி வைத்த உதயநிதி!
சென்னையில் கனமழை; அடுத்த 3 மணி நேரத்திற்கும் மழை நீடிக்கும் - வானிலை ஆய்வு மையம்
வாக்குப்பதிவின்போது நடந்த துப்பாக்கிச்சூடு குறித்து மாநில அரசு விசாரணை நடத்தும் - மம்தா
கொரோனா தொற்று அதிகரிப்பு; ராஜஸ்தானில் நாளை முதல் இரவு நேர ஊரடங்கு அமல்!
தமிழகத்தில் 8,000ஐ நெருங்கியது ஒருநாள் கொரோனா பதிப்பு!